Saturday, January 11, 2020

 #உலக #அறிவு

ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள்.

1) வரலாற்றின் தந்தை?
ஹெரடோடஸ்

2) புவியலின் தந்தை?
தாலமி

3) இயற்பியலின் தந்தை?
நியூட்டன்

4) வேதியியலின் தந்தை?
இராபர்ட் பாயில்

5) கணிப்பொறியின் தந்தை?
சார்லஸ் பேபேஜ்

6) தாவரவியலின் தந்தை?
தியோபிராச்டஸ்

7) விலங்கியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்

8) பொருளாதாரத்தின் தந்தை?
ஆடம் ஸ்மித்

9) சமூகவியலின் தந்தை?
அகஸ்டஸ் காம்தே

10) அரசியல் அறிவியலின் தந்தை?
அரிஸ்டாட்டில்

11) அரசியல் தத்துவத்தின் தந்தை?
பிளேட்டோ

12) மரபியலின் தந்தை?
கிரிகர் கோகன் மெண்டல்

13) நவீன மரபியலின் தந்தை?
T .H . மார்கன்

14) வகைப்பாட்டியலின் தந்தை?
கார்ல் லின்னேயஸ்

15) மருத்துவத்தின் தந்தை?
ஹிப்போகிறேட்டஸ்

16) ஹோமியோபதியின் தந்தை?
சாமுவேல் ஹானிமன்

17) ஆயுர்வேதத்தின் தந்தை?
தன்வந்திரி

18) சட்டத்துறையின் தந்தை?
ஜெராமி பென்தம்

19) ஜியோமிதியின் தந்தை?
யூக்லிட்

20) நோய் தடுப்பியலின் தந்தை?
எட்வர்ட் ஜென்னர்

21) தொல் உயரியியலின் தந்தை?
சார்லஸ் குவியர்

22) சுற்றுச் சூழலியலின் தந்தை?
எர்னஸ்ட் ஹேக்கல்

23) நுண் உயரியியலின் தந்தை?
ஆண்டன் வான் லூவன் ஹாக்

24) அணுக்கரு இயற்பியலின் தந்தை?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்

25) நவீன வேதியியலின் தந்தை?
லாவாயசியர்

26) நவீன இயற்பியலின் தந்தை?
ஐன்ஸ்டீன்

27) செல்போனின் தந்தை?
மார்டின் கூப்பர்

28) ரயில்வேயின் தந்தை?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்

29) தொலைபேசியின் தந்தை?
கிரகாம்ப்பெல்

30) நகைச்சுவையின் தந்தை?
அறிச்டோபேனஸ்

31) துப்பறியும் நாவல்களின் தந்தை?
எட்கர் ஆலன்போ

32) இந்திய சினிமாவின் தந்தை?
தாத்தா சாகேப் பால்கே

33) இந்திய அணுக்கருவியலின் தந்தை?
ஹோமி பாபா

34) இந்திய விண்வெளியின் தந்தை?
விக்ரம் சாராபாய்

35) இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?
டாட்டா

36) இந்திய ஏவுகணையின் தந்தை?
அப்துல் கலாம்

37) இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?
சுவாமிநாதன்

38) இந்திய பட்ஜெட்டின் தந்தை?
ஜேம்ஸ் வில்சன்

39) இந்திய திட்டவியலின் தந்தை?
விச்வேச்வரைய்யா

40) இந்திய புள்ளியியலின் தந்தை?
மகலனோபிஸ்

41) இந்திய தொழில்துறையின் தந்தை?
டாட்டா

42) இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
தாதாபாய் நௌரோஜி

43) இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

44) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
ராஜாராம் மோகன்ராய்

45) இந்திய கூட்டுறவின் தந்தை?
பிரடெரிக் நிக்கல்சன்

46) இந்திய ஓவியத்தின் தந்தை?
நந்தலால் போஸ்

47) இந்திய கல்வெட்டியலின் தந்தை?
ஜேம்ஸ் பிரின்சப்

48) இந்தியவியலின் தந்தை?
வில்லியம் ஜான்ஸ்

49) இந்திய பறவையியலின் தந்தை?
எ.ஒ.ஹியூம்

50) இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?
ரிப்பன் பிரபு

51) இந்திய ரயில்வேயின் தந்தை?
டல்ஹௌசி பிரபு

52) இந்திய சர்க்கஸின் தந்தை?
கீலெரி குஞ்சிக் கண்ணன்

53) இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?
கே.எம் முன்ஷி

54) ஜனநாயகத்தின் தந்தை?
பெரிக்ளிஸ்

Thursday, January 2, 2020

2019 ஆண்டும் உலகநாடுகளில் இடம்பெற்றவையும் - ஒரு மீள் பார்வை !

கடந்து சென்ற 12 மாதங்­களில் நிகழ்ந்­தவை என்ன என்­பதைத் திரும்பிப் பார்க்க உசி­த­மான தருணம். இந்த மீள்­பார்வை அடுத்த வரு­டத்தில் நிக­ழக்­கூடிய மாற்­றங்­க­ளுக்கு கட்­டியம் கூறு­வ­தாக அமையும்.

2019 ஆம் ஆண்டு போராட்­டங்­களின் வருடம் எனலாம். கிழக்கில் சிலி தொடக்கம் மேற்கில் ஹொங்கொங் வரையில் பெரும் போராட்­டங்கள். இவை ஆட்சி பீடங்­க­ளுக்கு சவால் விடுப்­ப­வை­யாக இருந்­தன.

சூடான், அல்­ஜீ­ரியா, பொலி­வியா ஆகிய நாடு­களில் நீண்­ட­காலம் ஆட்­சி­யி­லி­ருந்த தலை­வர்கள் வெளி­யே­றி­னார்கள். ஈரான், இந்­தியா, ஹொங்கொங் போன்­ற­வற்றில் முன்­னெ­டுக்­கப்­படும் ஆர்ப்­பாட்­டங்கள் அடுத்­தாண்டும் தொட­ரக்­கூ­டிய நிலை தென்­பட்­டது.

லெபனான் ஆர்ப்­பாட்டம் முக்­கி­ய­மா­னது. இங்கு பல தசாப்த காலம் நீடிக்கும் பொரு­ளா­தார நெருக்­கடி. இதன் கார­ண­மாக, சனத்­தொ­கையில் மூன்­றி­லொரு பங்கு மக்கள் வறு­மையில் வாடு­கி­றார்கள்.

பிராந்­திய அர­சியல் கார­ண­மாக ஆட்சி நிர்­வாகம் சீர்­கு­லைந்த தேசத்தில், அரச இயந்­தி­ரங்­களில் மலிந்து நின்ற ஊழல் மோச­டிகள். வட்ஸ்-அப் அழைப்­புக்­க­ளுக்கு வரி அற­வி­டுதல் மூலம் வரு­மானம் ஈட்ட அர­சாங்கம் முனைந்த சமயம், மக்­களின் ஆத்­திரம் ஆர்ப்­பாட்­ட­மாக வெளிப்­பட்­டது எனலாம். பிர­தமர்  சாத் ஹரீரி பதவி வில­கினார். ஆர்ப்­பாட்­டங்கள் ஓய­வில்லை.

சிலி என்ற தென் அமெ­ரிக்க தேசத்­திலும் அதே நிலை தான். கடந்த ஒக்­டோபர் மாதம் பொதுப் போக்­கு­வ­ரத்து கட்­ட­ணங்கள் அதி­க­ரிக்­கப்­பட்­டதை ஆட்­சே­பித்து மக்கள் வீதி­களில் இறங்­கி­னார்கள். இந்த ஆர்ப்­பாட்டம் வாழ்க்கைச் செல­வின அதி­க­ரிப்­பிற்கு எதி­ரான மக்கள் சக்­தி­யாகப் பரி­ண­மித்து, வன்­மு­றை­க­ளுக்கும் தூப­மிட்­டது. இதன் விளை­வாக 26 பேர் வரை பலி­யா­னார்கள்.

ஹொங்கொங் ஆர்ப்­பாட்­டங்கள் கொஞ்சம் வித்­தி­யா­ச­மா­னவை. ஒரே தேசம், இரு ஆட்சி நிர்­வாக முறைகள் என்ற கோட்­பாட்டின் கீழ், சீனாவின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள பிராந்­தியம். ஹொங்­கொங்­வா­சி­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் ஜன­நா­யக கட்­ட­மைப்பின் கீழ் சுய நிர்­ணய உரி­மை­யுடன் வாழ விரும்­பு­ப­வர்கள்.

ஹொங்கொங் பிராந்­தி­யத்தில் தவ­றி­ழைத்­த­வர்­களை சீனா­விற்கு நாடு கடத்தி, அங்கு விசா­ரிக்க வழி­வ­குக்கும் சட்­ட­மூ­லத்தை ஆட்­சே­பித்து கடந்த ஜூன் மாதம் மக்கள் வீதி­களில் இறங்­கி­னார்கள். சட்­ட­மூலம் வாபஸ் பெறப்­பட்­டது. வீதி­களில் இறங்­கிய மக்கள் ஐந்து கோரிக்­கை­களை முன்­வைத்து தொடர்ந்தும் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். பிராந்­தி­யத்­தி­லுள்ள சக­ல­ருக்கும் வாக்­கு­ரிமை வேண்டும், ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது பொலிஸார் கட்­ட­விழ்த்து விட்ட வன்­மு­றைகள் பற்றி விசா­ரிக்க வேண்டும் என்ற கோரிக்­கை­களும் அவற்றில் அடங்கும்.

பொலி­வி­யாவில் நிகழ்ந்த ஆர்ப்­பாட்டம் சிக்­க­லா­னது. அங்கு இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் ஈவோ மொராலெஸ் வெற்றி பெற்று, நான்­கா­வது தட­வை­யா­கவும் ஆட்சி பீடத்­திற்குத் தெரி­வா­கி­யி­ருந்தார். இரண்டாம் இடத்தைப் பெற்ற எதிர்க்­கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ, தேர்­தலில் முறை­கே­டுகள் நடந்­தி­ருப்­ப­தாகக் கூறி, பெறு­பே­று­களைப் புறக்­க­ணித்து தாமே இடைக்­கால ஜனா­தி­ப­தி­யென சுய பிர­க­டனம் செய்து கொண்டார்.

இந்த அர­சியல் பிரச்­சினை பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்குத் தூப­மிட்டு மக்கள் ஆர்ப்­பாட்­டங்கள் தீவிரம் பெற வழி­வ­குத்­தது. மக்கள் வன்­மு­றை­களில் ஈடு­பட்ட சமயம், எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்கு ஆத­ர­வாக செயற்­படும் பாது­காப்புப் படைகள் பார்த்துக் கொண்­டி­ருந்­தன. ஈவோ மொராலெஸ் மெக்­ஸிக்­கோ­விற்குத் தப்பிச் சென்று அர­சியல் புக­லிடம் கோரினார்.

பொலி­வி­யாவில் நடந்­தது மக்கள் புரட்­சி­யென அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்  டுவிற்­றரில் பதி­விட, இது அமெ­ரிக்க தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சதி­ மு­யற்­சி­யென ஈவோ மொராலெஸ் சாடினார்.

கடந்த ஒக்­டோபர் மாதம் ஈக்­கு­வ­டோரில் இரு­வார காலம் நீடித்த ஆர்ப்­பாட்­டங்­களால் அந்­நாடு முடங்கிப் போயி­ருந்­தது. கொலம்­பி­யா­விலும் வல­து­சாரி அர­சாங்­கத்தை ஆட்­சே­பித்து கடந்த நவம்பர் நடுப்­ப­குதி தொடக்கம் பொது வேலை நிறுத்­தங்­களும் ஆர்ப்­பாட்­டங்­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.
https://www.facebook.com/groups/SLASguide/
அல்­ஜீ­ரி­யாவில் , கடந்த இரு­பது வரு­ட­கா­ல­மாக பத­வி­யி­லி­ருந்து கொண்டு, ஐந்­தா­வது தட­வை­யா­கவும் ஆட்­சி­பீ­டத்தைக் கைப்­பற்ற முனைந்த ஜனா­தி­பதி அப்துல் அஸீஸ் பௌத்­பி­லிக்­கா­விற்கு எதி­ராக கடந்த பெப்­ர­வரி மாதம் ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­றது.

இரா­ணு­வத்தின் ஆத­ரவை இழந்த அல்­ஜீ­ரிய ஜனா­தி­பதி ஏப்ரல் மாதம் பதவி வில­கினார். அங்­குள்ள ஒட்­டு­மொத்த அர­சியல் கட்­ட­மைப்­பையும் மாற்­று­மாறு கோரி மக்கள் வீதிப் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். கடந்த 12ஆம் திகதி தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­ப­தியை மக்கள் நிரா­க­ரிக்­கி­றார்கள்.

இவ்­வாண்டு முற்­ப­கு­தியில் சூடா­னிலும் நாடு தழு­விய ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன. நான்கு மாதங்கள் நீடித்த மக்கள் போராட்­டத்தை அடுத்து, ஜனா­தி­பதி ஓமர் அல்-­ப­ஷாரின் மூன்று தசாப்­த­கால ஆட்­சிக்கு இரா­ணுவம் முற்­றுப்­புள்ளி வைத்­தது.

ஒக்­டோபர் முதலாம் திகதி தொடக்கம் ஈராக்கில் பெரும் ஆர்ப்­பாட்­டங்கள் நிகழ்ந்­தன. தமது சமூ­கத்தில் வறு­மையும், வேலை­வாய்ப்­பின்­மையும் தாண்­ட­வ­மா­டு­கையில், ஆட்­சி­யா­ளர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்­கி­றார்கள் என்­பது மக்கள் ஆதங்­க­மாக இருந்­தது.

பொரு­ளா­தார நெருக்­க­டி­களை ஆட்­சே­பித்து கோபத்தை வெளிப்­ப­டுத்தும் ஆர்ப்­பாட்­டங்கள் பெரும் மக்கள் இயக்­க­மாக பரி­ண­மித்­தன. இதன் கார­ண­மாக, கடந்த டிசம்பர் முதலாம் திகதி அர­சாங்கம் பதவி வில­கி­யது.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், பார­திய ஜனதா கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம்  பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிய குடி­யு­ரிமைத் திருத்தச் சட்­ட­மூலம் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு வழி­வ­குத்­தது.

அர­சியல் யாப்பின் மூலம் மதச்­சார்­பின்மை தேச­மாகப் பிர­க­டனம் செய்­யப்­பட்ட இந்­தியா. அய­லி­லுள்ள முஸ்லிம் நாடு­களில் அடக்­கு­மு­றைக்கு உட்­பட்டு மீண்டும் இந்­தி­யாவை நாடிய முஸ்­லிம்-­அல்­லா­த­வ­ருக்கு குடி­யு­ரிமை வழங்கும் சட்டம். இது முஸ்­லிம்­களைப் புறக்­க­ணித்து, இந்­திய சமூ­கத்தை மத­ரீ­தி­யாகப் பிள­வு­ப­டுத்­து­கி­றது என்று ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் வாதி­டு­கி­றார்கள். சட்­டத்தை முடக்க வேண்டும் என்ற கோரிக்­கை­க­ளுக்கு ஆட்­சி­யா­ளர்கள் தரப்பில் இது­வரை பதில் இல்லை.

அர­சியல் அரங்கை ஆராய்ந்தால், பிரிட்டன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து பிரிந்து செல்ல வழி­வ­குக்கும் பிரெக்ஸிட் நடை­முறை முக்­கிய இடத்தைப் பெற்­றி­ருந்­தது.

2016ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட கருத்­துக்­க­ணிப்பின் பிர­காரம், கடந்த மார்ச் 29ஆம் திகதி பிரிட்டன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து வில­கி­யி­ருக்க வேண்டும். ஆனால், பிர­தமர்  தெரேசா மே அம்­மை­யாரும், அவரைத் தொடர்ந்து பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட பொரிஸ் ஜொன்­சனும் விலகிச் செல்­லுதல் தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றியத் தலை­வர்­க­ளுடன் எட்­டிய உடன்­பா­டு­க­ளுக்கு பிரிட்டன்  பாரா­ளு­மன்றம் அங்­கீ­காரம் அளிக்­க­வில்லை.

கடந்த 12ஆம் திகதி நடத்­தப்­பட்ட தேர்­தலில் பொரிஸ் ஜொன்சன் தலை­மை­யி­லான கன்­சர்­வேட்டிவ் கட்­சிக்குக் கிடைத்த வெற்றி, அவ­ரது பிரெக்ஸிட் நடை­மு­றைக்­கான அங்­கீ­கா­ர­மாகக் கரு­தப்­பட்­டது. இதன் பிர­காரம், எதிர்­வரும் ஜன­வரி 9ஆம் திகதி பிரெக்ஸிட் உடன்­ப­டிக்­கைக்கு இறுதி அங்­கீ­காரம் பெற்று, 31ஆம் திகதி பிரிட்­டனை ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து விலகச் செய்­வது அவ­ரது நோக்கம்.

அடுத்­த­தாக டொனால்ட் ட்ரம்­பிற்கு எதி­ரான அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை. 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெற நினைக்கும் டொனால்ட் ட்ரம்ப், தமது பிர­தான போட்­டி­யா­ள­ராகத் திக­ழக்­கூ­டிய ஜோ பைடனின் நற்­பெ­ய­ருக்கு முறை­யற்ற விதத்தில் களங்கம் விளை­விக்க முனைந்தார் என்­பது குற்­றச்­சாட்டு.

ஜோ பைடனை விசா­ரிக்­கு­மாறு  யுக்ரைன் மீது அழுத்தம் தொடுத்­ததன் மூலம் தமது பத­விக்­கு­ரிய அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்தார் என்­பதன் அடிப்­ப­டையில் ட்ரம்­பிற்கு எதி­ராக அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை தாக்கல் செய்­யப்­பட்­டது.

இந்தப் பிரே­ரணை பிர­தி­நி­திகள் சபையில் நிறை­வேற்­றப்­பட்­டது. எனினும், ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்­டு­மானால், அர­சியல் குற்­ற வியல் பிரே­ரணை செனட் சபையில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற வேண்டும். செனட்டில் ட்ரம்பின் குடி­ய­ரசுக் கட்­சிக்கே பெரும்­பான்மைப் பலம் உள்­ளதால், அங்கு அர­சியல் குற்­ற­வியல் பிரே­ரணை நிறை­வே­று­வது சாத்­தியம் இல்லை.

எனினும், எதிர்­வரும் நவம்பர் 3ஆம் திகதி நடை­பெறும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ட்ரம்ப்பை மீண்டும் தெரிவு செய்ய வேண்­டுமா என்­பதை அமெ­ரிக்க மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், கடந்த ஏப்ரல், மே மாதங்­களில் கட்டம் கட்­ட­மாக இடம்­பெற்ற பொதுத் தேர்­தலில் பார­திய ஜனதா கட்சி தலை­மை­யி­லான தேசிய ஜன­நா­யகக் கூட்­டணி அமோக வெற்­றி­யீட்­டி­யி­ருந்­தது.

இந்த வெற்­றிக்கு அர்த்தம் கற்­பிப்­பது சிர­ம­மான காரி­ய­மாக இருந்­த­போ­திலும், இதை இந்­திய தேசத்தில் கடும்­போக்கு இந்­துத்வ கோட்­பா­டு­க­ளுக்கு கிடைத்த வெற்­றி­யாகப் பார்ப்­ப­வர்கள் அதிகம்.

இந்தப் பார்வைக் கோணம் சரி­யா­னது என்­பதை நிரூ­பிக்கும் வகையில், நரேந்­திர மோடியின் அர­சாங்கம் காஷ்­மீ­ருக்கு வழங்­கப்­பட்ட விசேட அந்­தஸ்தை நீக்­கி­யி­ருந்­தது. ஜம்­மு-­ – காஷ்­மீரை இரு கூறு­க­ளாக்கி, யூனியன் பிர­தே­சங்­க­ளாக மாற்­றி­யது.

இந்­தி­யாவின் தேச நலன்­களைக் கருதி இந்தத் தீர்­மா­னத்தை எடுத்­த­தாக மோடியின் அர­சாங்கம் நியாயம் கூறி­னாலும், இது தமது சுய­நிர்­ணய போராட்­டத்தை முடக்கும் திட்­ட­மிட்ட சதி­யென காஷ்மீர் மக்கள் வாதி­டு­கி­றார்கள்.

பிராந்­திய அர­சியல் நெருக்­க­டி­களை ஆராய்ந்தால், அமெ­ரிக்­கா­விற்கும் ஈரா­னுக்கும் இடை­யி­லான முறுகல் நிலை பல பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­தி­ருந்­தது.

உலகின் பலம் பொருந்­திய நாடுகள் இணைந்து, 2015 இல் உரு­வாக்­கிய அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் இருந்து அமெ­ரிக்கா வில­கி­யி­ருந்­தது. அத்­துடன் நில்­லாமல் ஈரான் மீது மீண்டும் பொரு­ளா­தாரத் தடை­களை விதித்­தி­ருந்­தது.

இதன் விளை­வுகள், ஹோர்முஸ் நீரி­ணை­யிலும், சவூதி அரே­பிய மண்­ணிலும் எதி­ரொ­லித்­தன.

உலகில் ஆகக்­கூ­டு­லான எரி­பொ­ருட்கள் கப்­பல்­களில் ஏற்றிச் செல்லும் கடற்­பா­தை­யான ஹோர்முஸ் நீரிணை. அங்கு எண்ணெய்த் தாங்கிக் கப்­பல்கள் தாக்­கப்­பட்டு உலகம் முழு­வ­திற்­கு­மான எரி­பொருள் விநி­யோகம் முடங்­கக்­கூ­டிய நிலை கடந்த ஜூலை மாதம் ஏற்­பட்­டது.

இந்தத் தாக்­கு­த­லுக்கு ஈரானே பொறுப்­பென்ற தோற்­றப்­பாட்டை ஏற்­ப­டுத்தும் முயற்­சியில் டொனால்ட் ட்ரம்ப் நேர­டி­யாக ஈடு­பட்டார். அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் இருந்து தாம் தன்­னிச்­சை­யாக வெளி­யே­றி­யதால் ஏற்­பட்ட அவப்­பெ­யரைக் களை­வ­தற்கு ஈரானை வில்­ல­னாக சித்­த­ரிக்கும் முயற்­சியே அது.

சவூதி அரே­பி­யா­வி­லுள்ள எண்ணெய்க் குதங்கள் தாக்­கப்­பட்ட சமயம், அதனை ஈரானே தாக்­கி­யது என்று டொனால்ட் ட்ரம்ப் வெளிப்­ப­டை­யாக குற்­றஞ்­சாட்­டி­ய­தையும் கூறலாம்.

ஈரான் விவ­கா­ரத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி முன்­வைக்கும் குற்­றச்­சாட்­டுக்கள் ஆதாரம் அற்­றவை என்­பது காலப்­போக்கில் தெரி­ய­வ­ரு­வது வழக்கம். இது 2020இல் மென்­மேலும் உறு­தி­யாகக் கூடும்.

ட்ரம்ப் இன்­னொரு வேலை­யையும் செய்தார். கடந்த ஒக்­டோபர் முதலாம் திகதி சிரி­யாவின் வட­ப­கு­தியில் துருக்­கி­யு­ட­னான பொது எல்லை அமைந்­துள்ள பிராந்­தி­யத்தில் இருந்து அமெ­ரிக்கத் துருப்­புக்­களை வாபஸ் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து துருக்­கியப் படைகள் எல்லை தாண்டிப் பிர­வே­சித்­தன. துருக்­கிய அர­சாங்கம் பயங்­க­ர­வா­தி­க­ளாகக் கருதும் குர்திஷ் போரா­ளி­களை விரட்­டி­ய­டிப்­பது ஊடு­ரு­வலின் நோக்கம்.

சிரி­யாவின் வட­ப­கு­தியில் குர்திஷ் இனத்­த­வர்கள் சுயாட்­சி­யுள்ள மாநி­ல­மொன்றை அமைத்து சுய­நிர்­ணய உரி­மை­யுடன் வாழ்ந்து வரு­கி­றார்கள்.

இந்த சுய­நிர்­ணய உரிமைப் போராட்­டத்­திற்கு அமெ­ரிக்கா உத­வி­ய­போ­திலும், தற்­போ­தைய தரு­ணத்தில் நிலவும் பூகோள அர­சியல் நிலை­மைகள் கார­ண­மாக துருக்­கியின் ஆத­ரவு முக்­கி­ய­மா­ன­தாக அமைந்­தி­ருக்­கி­றது.

அதீத சுய­நலம் கார­ண­மாக, தம்மை நம்­பிய குர்திஷ் மக்­களைக் கைவிட்டு, துருக்­கிய ஜனா­தி­ப­தியின் எண்­ணங்­களை நிறை­வேற்­று­வ­தற்­காக குர்திஷ் மக்­களை விரட்­டி­ய­டிக்க வழி­வ­குத்தார், ட்ரம்ப்.

ரஷ்­யாவின் தலை­யீட்டைத் தொடர்ந்து துருக்­கியப் படைகள் சிரி­யாவின் வட­ப­கு­தியில் இருந்து வெளி­யே­றி­யி­ருந்­தன.

வர்த்­தக உல­கிலும் அமெ­ரிக்க சுய­நலக் கோட்­பாட்டை அனு­ச­ரித்­தது. ட்ரம்பின் 'அமெ­ரிக்கா ஃபர்ஸ்ட்' என்ற கோட்­பாட்டை முன்­னி­றுத்தி, சீனா­வுடன் மாத்­தி­ர­மன்றி ஐரோப்­பிய ஒன்­றி­யத்­து­டனும் வர்த்­தகப் போர்­களை ட்ரம்ப் முன்­னி­றுத்­தினார்.

2019 இல் நிகழ்ந்த முக்­கி­ய­மான அர­சியல் சந்­திப்­பாக, அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்கும், வட­கொ­ரியத் தலை­வ­ருக்­கு­மி­டையில் கடந்த பெப்­ர­வ­ரி­யிலும், ஜூனிலும் நிகழ்ந்த சந்­திப்­புக்­களைக் குறிப்­பிட முடியும்.

இந்த சந்­திப்­புக்கள் இரு நாடு­க­ளுக்கும் இடையில் ஆண்­டாண்டு காலம் நீடிக்கும் பகையை முடி­வுக்குக் கொண்டு வரக்­கூ­டிய பின்­பு­லத்தை உரு­வாக்­கக்­கூடும் என்ற நம்­பிக்­கையை உரு­வாக்­கி­ய­போ­திலும், அது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. அடுத்த கட்ட சமா­தான நகர்­வு­களில் இரு நாடு­களும் அக்­கறை காட்­ட­வில்லை.

பேச்­சு­வார்த்­தை­களை மீளத் தொடங்­கு­வதில் ஆர்­வத்­துடன் இருப்­ப­தாக கடந்த செப்­டெம்பர் மாதம் வட­கொ­ரியா அறி­வித்­தது. அதற்கு அமெ­ரிக்­கா­விடம் இருந்து சரி­யான பதில் வழங்­கப்­ப­ட­வில்லை. 

சர்­வ­தேச அளவில் பல விட­யங்­களால் மூக்­கு­டைப்­பட்டு நின்ற ட்ரம்­பிற்கு கடந்த ஒக்­டோபர் 27ஆம் திகதி ஐ.எஸ் இயக்கம் தொடர்பில் வெற்றிப் பிர­க­டனம் செய்ய வாய்ப்புக் கிடைத்­தது. அன்­றைய தினம், ஐ.எஸ் தலைவர் அபு பக்கர் அல்-­பக்­தாதி கொல்­லப்­பட்­ட­தாக அறி­வித்தார். படை­களால் சுற்றி வளைக்­கப்­பட்ட நிலையில், அல்-­பக்­தாதி தற்­கொலை செய்து கொண்­ட­தாக ட்ரம்ப் குறிப்­பிட்டார்.

இஸ்­லா­மிய கடும்போக்குத் தீவிரவாதம் என்று மேற்குலகம் வர்ணிக்கும் போக்கிற்கு எதிராக, தீவிர வலதுசாரி சிந்தனை எந்தளவு தீவிரமாக மேலைத்தேய சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ளது என்பதை கிறைஸ்ட்-சேர்ச் தாக்குதல் எடுத்துக் காட்டியது.

வெள்ளையின மேலாதிக்க சிந்தனையால உந்தப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜை ப்ரென்டன் டரன்ட் என்பவர், துப்பாக்கிகளைக் கையிலேந்தி இரு பள்ளிவாசல்களுக்குப் பிரவேசித்து ஜூம்ஆ தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்லாமியர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். தமது கொடுஞ்செயலை பேஸ்புக்கில் நேரடியாக மற்றவர்கள் காணும்படி செய்தார். இதில் 51 பேர் பலியானர்கள். 40 பேர் வரை காயமடைந்தார்கள்.

இந்தத் தாக்குதலின் பின்விளைவுகளை நியூஸிலாந்தின் இளம் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அம்மையார் எதிர்கொண்ட விதம் ஒட்டுமொத்த உலகிற்கும் மனிதநேயத்தைப் போதித்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள். அவர்களது குடும்பத்தவர்களை அரவணைத்து ஜெசிந்தா அம்மையார் ஆறுதல் சொன்ன விதத்தை ஒட்டுமொத்த உலகமும் வியந்து பார்த்தது.

2019இல் மனிதநேயம் என்பதை நோக்கினால், தமிழ்நாட்டின் நடுக்காட்டுப்பிட்டியிலுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் வில்சன் என்ற சிறுவனுக்காக உலக மக்கள் ஒன்றுசேர்ந்து பிரார்த்தனை செய்த விதத்தை மறக்க முடியாது. பிரார்த்தனைகள் பலனற்றுப் போனதால், பச்சிளம் பாலகன் சடலமாக மீட்கப்பட்ட காட்சியை எவரும் இலகுவில் மறந்து விட முடியாது.
2019ம் ஆண்டு உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சில முக்கிய நிகழ்வுகள்

01. நிலவின் தென் துருவப் பகுதியில் இறங்கிய சீனாவின் சாங்'ங-4

சீனாவின் சாங்'ங-4 என்ற விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியிலுள்ள ஐட்கென் படுகையில் பெய்ஜிங் நேரப்படி ஜனவரி 3ம் தேதி காலை 10.26 மணிக்கு தரையிறங்கியது என்று சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.

02. வெனிசுவேலா அரசியல் சாசன நெருக்கடி

ஜனவரி 10, 2019 - வெனிசுவேலா தேசிய பேரவை குவான் குவைடோவை இடைக்கால தலைவராக அறிவித்ததோடு, அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை தொடங்கியது.
குவைடோவை வெனிசுவேலாவின் இடைகால தலைவராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏற்றுகொண்டிருந்தன. இதையடுத்து வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவுடன் தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொண்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வெனிசுவேலாவில் அதிகாரத்தை அபகரிக்கப்பார்ப்பதாக ரஷ்யா கண்டித்தது.

03. அமெரிக்கா, கனடா, சீனா இடையே சர்ச்சை ஏற்படுத்திய ஹுவாவெய்

ஜனவரி 28 - ஹுவாவெய் நிறுவன தலைமை அதிகாரி மெங் வான்ட்சொ-ஐ அமெரிக்கா கேட்டுகொண்டதன் பேரில் கனடா கைது செய்தது. இந்த சம்பவம் கனடா, சீனா, அமெரிக்கா இடையே ராஜ்ஜீய சர்ச்சையாக உருவாகியது. ஹுவாவெய் நிறுவனத்தை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் சேர்த்தது.
இரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை ஹூவாவெய் நிறுவனமும், அதன் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொ-வும் மீறினார்கள் என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு. ஆனால், இந்த குற்றச்சாட்டை ஹூவாவெய் மறுக்கிறது.
மெங் வான்ட்சொ-ஐ கைது செய்த்து மனித உரிமை மீறல் என்று தெரிவித்த சீனா, இரண்டு கனடா நாட்டவரை கைது செய்து, அவர்கள் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டியது.

04. அரேபிய தீபகற்பத்திற்கு சென்ற முதல் போப்
பிப்ரவரி 3 - ஐக்கிய அமீரகம் சென்ற போப் பிரான்சிஸ் அரேபிய தீபகற்பத்திற்கு செல்லும் முதல் போப் என்ற பெருமை பெற்றார். அபுதாபி வந்த அவரை முடியரசர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் வரவேற்றார்.
போப் பிரான்சிஸ் பங்கேற்ற மதநல்லிணக்க கூட்டத்தில் சுமார் 120,000 பேர் கலந்துகொண்டனர். சௌதி அரேபியா பங்கேற்றுள்ள நிலையில், அரேபியா செல்லும் முன் ஏமன் போர் குறித்து போப் கவலை தெரிவித்திருந்தார்.

05. தோல்வியில் முடிந்த டிரம்ப்- கிம் ஜாங்-உன் இரண்டாவது சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் ஜாங்-உன் இரண்டாவது சந்திப்பு பிப்ரவரி 27ம் தேதி இரவு விருந்துடன் தொடங்கி வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டு நாட்கள் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், இரண்டாம் நாள் கூட்டத்தின்போது, வடகொரியாவின் கோரிக்கைகள் முழுவதையும் ஏற்றுகொள்ள முடியாது என்று கூறி டிரம்ப் வெளிநடப்பு செய்தார்.

06. பாரிஸ் பழமையான நோட்ர-டாம் தேவாலய தீ விபத்து

ஏப்ரல் 15: பாரிஸ் நகரில், தீ விபத்தால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயம் சேதமடைந்தது.
தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் ஆகியன கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்தன.
இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டுகளைக் கொண்ட கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கியப் பகுதிகள் தீ விபத்தில் இருந்து தப்பின.
400 தீயணைப்பு வீரர்கள் இணைந்து சுமார் 15 மணிநேரம் போராடி இந்த தீயை முழுமையாக கட்டுக்கு கொண்டு வந்தனர்.

07. தாய்லாந்து மன்னராக மணிமுடி சூடினார் வஜ்ரலாங்கோர்ன்

தாய்லாந்து அரசராக மகா வஜ்ரலாங்கோர்ன் மணிமுடி சூட்டப்பட்டார். முடிசூடும் சடங்குகள் மூன்று நாட்கள் நடைபெற்றன.
நீண்டகாலம் ஆட்சி செய்த தந்தை பூமிபோன் அடூன்யடேட் 2016ம் ஆண்டு இறந்த பின்னர், 66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் அரசமைப்பு சட்ட முடியாட்சியின் மன்னரானார்.
மே மாதம் முதல் நாள், தனது மெய்காப்பாளர் பிரிவின் துணைத் தலைவர் ஜெனரல் சுதிடா வஜ்ராலங்கோர்ன் நா அயூடியா என்பவரை அரச குடும்பத்தில் சேர்த்து திருமணம் செய்து கொண்ட மன்னர் வஜ்ராலங்கோர்ன், தாய்லாந்தின் அரசியாக சுதிடா விளங்குவார் என்று அறிவித்தார்.

08. சிரியா உள்நாட்டு போரில் முக்கிய தாக்குதல்
மே மாதம் 6ம் தேதி சிரியா உள்நாட்டு போரில் மிக முக்கிய தாக்குதல் நடத்தியுள்ளதாக குர்து இனத்தவர் தலைமையிலான அமெரிக்க ஆதரவு படை தெரிவித்தது.

09.சௌதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்குதல்

மே மாதம் 12ம் தேதி அரம்கோ நிறுவனத்தின் இரண்டு எண்ணெய் கப்பல் உள்பட நான்கு கப்பல்கள் சேதமடைந்தன. இதற்கு இரான்தான் காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.
ஜூன் 13ம் தேதி நடைபெற்ற இன்னொரு எண்ணெய் கப்பல்கள் தாக்குதல், வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா 1000 படைவீரர்களை நிறுத்த காரணமாகியது.
ஜூன் 20ம் தேதி அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது.
செப்டம்பர் 14ம் தேதி சௌதி அரேபியா எ்ணணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், செப்டம்பர் 21ம் தேதி, பல நுற்றுக்கணக்கான துருப்புக்களை வளைகுடாவுக்கு அனுப்பவும், ஆயுதங்களை விற்கவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி வழங்கினார்.

10. ஆண்கள் கிரிகெட் உலகக் கோப்பை - இங்கிலாந்து சாம்பியன்
ஜூலை 14. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதல்முறையாக இங்கிலாந்து அணி வென்றது.
வரலாறு காணாத பரபரப்போடு இந்த போட்டி நடந்து, கடைசி பந்தில் வெற்றி தோல்வியில்லாமல் சமநிலையில் முடிந்தது.
பிறகு வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவர் போட்டியும் சமநிலையில் முடிந்தது.
எனவே, ஆட்டத்திலும் சூப்பர் ஓவரிலும் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்துக்கு உலகக் கோப்பை வழங்கப்பட்டது.

11  பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி - அமெரிக்கா சாம்பியன்
ஜூலை 7ம் தேதி பிரான்சி்ல் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா கோப்பையை தட்டிச்சென்றது.

12.பிரிட்டனுக்கு புதிய பிரதமர்
பிரெக்ஸ்ட் ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புகொள்ள மறுத்துவிட்டதால், பிரிட்டனின் முன்னாளர் பிரதமர் தெரீசா மே பதவி விலகுவதாக ஜூன் 7ம் நாள் அறிவித்ததோடு, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவர் விலகினார்.
ஜூலை 24ம் தேதி பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார். (டிசம்பரில் இடம்பெற்ற தேர்தலில் இவரே வெற்றியும் பெற்றார்)

13. அமேசானில் வரலாறு காணாத காட்டுத்தீ
ஆகஸ்ட் 21: பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காட்டில் தீ பற்றி பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது.
இந்த காட்டுத்தீ 'சர்வதேச நெருக்கடி' என்று விவாதிக்கப்படும் அளவுக்கு பெரிய அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.
அந்த வார இறுதியில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு பெரிய பிரச்சனையானது.

14. பருவநிலை மாற்றம் தொடர்பான மாணவர்கள் போராட்டம்
செப்டம்பர் 20: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் உலகெங்கும் தொடங்கியது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செப்டம்பர் 27ம் தேதி கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ செயற்பாட்டளார் கிரேட்டா துன்பர்க் மோன்ரீலில் நடத்திய போராட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றனர். அன்று உலகெங்கும் நடைபெற்ற போராட்டங்களில் 40 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

15. டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்
செப்டம்பர் 24: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் தொடர்பான முறையான விசாரணைக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பலோசி அறிவித்தார்.
மக்கள் பிரதிநிதிகள் அவையில் இந்த விசாரணை தொடங்கியது.
தனது அரசியல் எதிராளியை வீழ்த்த வெளிநாட்டு நபர் ஒருவரிடம் உதவி கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது குறித்த முறையான விசாரணை ஒன்றை அந்நாட்டின் ஜனநாயக கட்சியினர் துவக்கியுள்ளனர்.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சியினரின் முயற்சிகளை ''குப்பை'' என்று வர்ணித்திருந்தார்.

16. இராக்கை ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம்
இராக் நாட்டு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகக் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
மிக அதிகமாக இருக்கும் வேலைவாய்ப்பின்மை, மோசமான பொதுச் சேவைகள், மற்றும் ஊழல். இதுதான் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதற்கான முக்கிய காரணங்கள்.

17. ஜமால் கஷோக்ஜி கொலை: 5 பேருக்கு மரண தண்டனை
டிசம்பர் 23: கடந்த ஆண்டில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியது.
துருக்கியில் உள்ள இஸ்தான்புல்லில் இருக்கும் சௌதி அரேபியாவின் துணை தூதரகத்தில் அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சௌதி அரசு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஆண்டின் இறுதியில் அவரது கொலையாளிகள் என்று சௌதி அரசு கூறும் நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை சௌதி மீது எழுந்துள்ள சர்வதேச கண்டனங்கள் மற்றும் விமர்சனங்களை போக்கும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.

வாழ்த்துக்கள்

தொகுப்பு :-
எப்.எச.ஏ. ஷிப்லி

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...