Friday, December 28, 2018

நொத்தாரிசு ஆரம்ப பரீட்சையில் கேட்கப்பட்ட பொது அறிவு வினாக்கள் விடைகளுடன்

1.உலகில் அதிகளவு மக்கள் வாழும் நகரம் எது?
ரோக்கியோ

2. 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் படி இலங்கையின் மொத்த வருமானம் எத்தனை பில்லியன்?.
2000-2500

3. 2020ல் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ள நகரம் எது?
டோக்கியோ

4. இலங்கையின் தற்போதைய கணினி அறிவு வீதம்?.
28.3%

5. பொதுநலவாய அமைப்பின் உத்தியோகபூர்வ தலைவர் யார்?.
Patricia Scotland

6. ஆங்கிலேயரின் கண்டிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட ஆண்டு?
1815

7. இலங்கையின் தற்போதைய எழுத்தறிவு வீதம்?.
93.2%

8. கோப்பிப் பயிர்ச்செய்கைக்கு உலகப்புகழ் பெற்ற நாடு எது?
பிரேசில்

9. இலங்கை பதிவாளர் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
1864

10. பாரம்பரிய சுமோ விளையாட்டு வீரர்கள் உள்ள நாடு?
ஜப்பான்

11. பத்திக் கலை ஆரம்பமான நாடு?

12. இலங்கையில் தேயிலை செய்கையை அறிமுகப்படுத்திய பிரித்தானியர் யார்?
ரெயிலர்

13. கோட்டை இராச்சிய காலப்பகுதியில் பிரிவெனாக்களில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான ஆதாரங்களை கொண்ட வரலாற்று நூல் எது?
தீபவம்சம்

14. சமாதான நீதிவான்களை நியமிக்கும் அதிகாரம் காணப்படுவது?
நீதி அமைச்சிடம்

15. பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக கல்வியமைச்சு அறிமுகப்படுத்திய காப்புறுதி திட்டத்தின் பெயர்?
சுரக்‌ஷா

16. 'கம்சபா' முறையை அறிமுகப்படுத்திய மன்னன் யார்?.

17. வயதில் கூடிய டென்னிஸ் வீராங்கனை யார்?.
   செரினா வில்லியம்ஸ்

18. இந்தியப் பிரதமரின் கட்சி எது?.
பாரதிஜ ஜனதா கட்சி

19. சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டத்தின் பெயர் என்ன?
சூர்ய பல

20. நீல பொருளாதாரம்(Blue economy) என்றால் என்ன?
கடல் சார் பொருளாதார அபிவிருத்தி

21. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நாடு எது?
இங்கிலாந்து

Saturday, December 1, 2018

தாமரை கோபுரம்

இலங்கை மாணவர்களுக்காக பதிவு! தாமரை கோபுரம் பற்றிய தெரியுமா?
தென் ஆசியாவின் உயரமான தாமரைக் கோபுரம்..!
================================

கட்டாயம் வாசியுங்கள், மறக்காமல் Like & Share செய்யுங்கள் – உங்களுடைய ஒரு Shareஆல் பலர் பயனடையலாம்…

– 356 மீற்றர் உயரமும், 4 நிலக்கீழ் மாடிகள்

– 90ஆவது மாடிக்கு 2 நிமிடத்தில் பயணம்- 10 ஏக்கர் விஸ்தாரண
நிலம்

– இரண்டு இலட்சம் சதுர அடி பணிகள் பூர்த்தி

– 1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி

– செக்கனுக்கு 12 மீற்றர் வேகத்தில் காற்று வீசினால் பணிகள் தடை!

– 50 வானொலி நிலையங்கள்

– 50 தொலைக்காட்சி நிலையங்கள்

– 20 தொலைத்தொடர்பு நிலையங்களுக்கு வசதி

Image result for தாமரை கோபுரம்

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்கணுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.

சிமேந்து நிறத்தில் காணப்படும் இக்கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் முடிவுறாத போதிலும் அது வாணளாவ வளர்ந்து நிற்கிறது.

இதன் நிர்மாணப் பணிகள் 2012 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டன. அடுத்தாண்டில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கோபுரத்தை பார்ப்பவர்கள் எப்படி இந்தளவு உயரமாக கட்டப்படுகிறது, இவ்வளவு பெரியதான கோபுரத்தில் ஆட்கள் எப்படி வேலை செய்வார்கள்? இப்போது உயரமென்ன? இப்பணி எப்போது நிறைவுறும்? இவ்வளவு பெரியதான கோபுரம் ஏன் கட்டப்படுகின்றது? இப்படியான பலகேள்விகள் பார்ப்பவர்களின் உள்ளத்தில் உருவாகுவது பொதுவானதே.

இக்கோபுரம் கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இக்கோபுரத்தின் உச்சிக்குச் சென்றால் நாம் எங்கே நிற்கிறோம்.

இவ்வளவு பெரியதான உயரமான கட்டடம் சென்றதில்லை என்ற நினைப்பேவரும். இக்கட்டிடத்தின் உச்சிக்கு செல்வதற்கு உள்பகுதியில் மின்சார லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கொங்கிறீட் சுவர்களின் குழல் வடிவத்திலே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இக்கட்டிடத்தின் 215 உயரத்திற்கு லிப்ட்டினூடாக செல்வதற்கு சுமார் 2 நிமிடங்களே சென்கின்றன.

இக்கோபுரத்தினூடாக எமது நாட்டுக்குப் புகழ் கிடைப்பதுடன் கொழும்பு நகரின் அழகை மேன்மைப்படுத்தும் கோபுரமாகத் திகழும். உலக ரீதியில் வானத்தைத் தொடும் அளவில் பாரிய உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டுவரும் அதேநேரத்தில் பிரான்ஸ் பைசா கோபுரம் 324 மீட்டர் உயரமுடையது.

ஆனால் தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீட்டராகும். இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாகும்.

அத்துடன், உலகிலேயே உயரமான கோபுரங்களில் ஒன்றாக இதுவும் காணப்படும்.

இத்தாமரைக் கோபுரத்தில் முதலாம் மாடியில் வர்த்தக் கடைத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்படுகிறது.

மேல் பகுதியில் 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபமும். திருமண வரவேற்பு மண்டபம், ஆடம்பர அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம் உட்பட பூரண வசதிகள் நிறைந்த்தாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், தொலைத்தொடர்பாடல்கள் அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைக்கப்படுகின்றன.

கோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் சீனருடன் இலஙகை ஊழியர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

பல்வேறு பரிவர்த்தனை நிலையங்களை கொண்டதாக அமைக்கப்படும் இந்தத் தாமரைக் கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான தாமரை வடிவிலான அமைக்கப்படு்ம் கோபுரமாகவும் திகழவிருக்கிறது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்தத் தாமரைத் கோபுரத்துக்கான ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

தற்சமயம் இந்த கோபுரத்தின் நிர்மாண வேலைகள் இரண்டு இலட்சம் சதுரஅடி அளவில் பூர்த்தியடைந்துள்ளன.

எதிர்காலத்தில் இதன் நிர்மாண வேலைகள் வாரத்துக்கு ஐந்து மீட்டர் என்ற அடிப்படையில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்ப கட்ட நிர்மாண வேலைகள் நிறைவு பெற்றதுடன் இரண்டாம் கட்ட வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.

இக்கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவுறும் என்று பொறியியலாளர் சிரோமால் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதில் 1500 வாகனங்களை ஒரே தடவையில் நிறுத்தி வைக்கக் கூடியதாக பாரிய வாகன தரிப்பிடம் ஒன்றும் வர்த்தக கட்டடத் தொகுதியும் நிர்மாணிக்கப்படும்.

சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரம் முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்படும் போது, 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்தீரணத்தையும் கொண்டதாக அமைந்திருக்கும்.

கடந்த காலங்களில் பல சர்ச்கைகளை உண்டு பண்ணிய இக்கோபுர நிர்மாணப் பணிகளுக்குப் பல தடையான ஆதாரங்களும் எதிர்ப்புகளும் உருவாகி மறைந்துள்ளன.

அத்துடன் தாமரைக் கோபுரத்தில் அயல்நாடுகளுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தி நிராகரிக்கப்பட்டுள்ளது.

இக்கோபுர பணியில் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் 50 பொறியியலாளர்களும் பணியாற்றுகின்றனர்.

கட்டிட நிர்மாணத்திற்கு இரும்பு 5000 டொன், கொங்கிறீட் 20,000 கனமீட்டரும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இக்கோபுரத்தின் மேல் பகுதியில் வேலை நடைபெறும் வேளையில் செக்கனுக்கு 12 மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் வேலைகள் முன்னெடுக்க முடியாமல் தடைப்பட்டுவிடும்.

இக்கோபுரத்தைச் சுற்றிலும் பேரவாவி இருப்பதினால் அத்திரவாரப் பகுதியின் ஸ்திரத்திற்கு ஆரம்பக் கட்ட பணிகளுக்கு 4000 கனமீட்டர் கொன்கிறீட்டும், 400 தொன் இரும்பும் செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்தாமரை கோபுரத்தில் வானொலி மற்றும் தொலைகாட்சிகளுக்காக 350 மீட்டர் உயரமான பரிவர்த்தனை கோபுரங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன. அத்துடன், கண்காணிப்பு கூடம், தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையங்கள் அனைத்தும் உள்ளடக்கியதாகவே அமைக்கப்படவுள்ளது.

பத்து ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கியதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் இத்தாமரைத் கோபுர திட்டத்துக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப்படும்.

இந்த கோபுரம் நிலத்துக்கு கீழ் நான்கு மாடிகளுடன் ஆரம்பமாகிறது.

இக்கோபுரத்திற்கு அதிவேக மின்சார லிப்டுகள் அமைக்கப்படவுள்ளதுடன், 85 முதல் 90 வரையிலான மாடிகளுக்கு சுமார் இரண்டே நிமிட குறுகிய நேரத்தில் செல்லக்கூடியதாக இருக்கும்.

நிலத்துக்குக் கீழான நான்கு மாடிகள் நிர்மாணிக்கப்பட்டதும் இந்த கட்டடம் ஒரு சிலின்டரின் வடிவத்தில் காணப்படும் அது 270 மீட்டர் வரை அதாவது 85 அல்லது 90 மாடிகள் வரை உயரும் தாமரைப் பூவின் வடிவில் வரும் கோபுரத்தில் ஒன்பது மாடிகள் உள்ளடக்கப்படும்.

இந்த ஒன்பது மாடிகளுக்கும் பார்வையாளர் கூடங்களும் அமைக்கப்படும். இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் தெளிவான காலநிலையில் இலங்கை முழுவதையும் பார்க்கலாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

அவ்வாறே சுமார் 50 வானொலி நிலையங்களும் 50 தொலைகாட்சி நிலையங்களும் 20 தொலைத்தொடர்பு சேவை நிலையங்களும் அமைப்பதற்கு இடவசதி அளிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

தாமரைக் கோபுரத்தில் டிஜிற்றல் பிராந்திய தொலைக்காட்சி ISDB-T ,தொலைத்தொடர்பாடல்கள், பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வசதிகள் போன்றன உருவாக்கப்படவுள்ளன.

இவை இலங்கையர்களாலேயே பயன்படுத்தப்படும். அத்துடன், இக்கோபுரமானது சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கேபுரம் முடிவுற்றால் இலங்கையின் தொடர்பாடல் தொழில் நுட்பம் பன் மடங்காக உயரும் என நம்புகிறேன்..

உலகின் மிக நீண்ட கடல் பாலம்!


உலகிலே மிகப்பெரிய கடல் பாலத்தை திறந்து வைத்தது சீனா. 

சீனாவில் இருந்து கடல் வழியாக ஹொங்கொங் செல்வதற்காக கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்ட கடல்பாலம் செவ்வாய் (23.10.2018) அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

55 கிலோமீற்றர் நீளமான குறித்த கடல் பாலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

ஹாங்காங், மக்காவ் நகரங்களை பிரதான சீனாவின் ஜூகாய் நகரை இணைக்கும் இந்த பாலம் நிலத்தை தொடாமல் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத பாம்பு போல நீண்டு கிடக்கிறது. இதிலும் 6.7 கிலோ மீட்டர் பாலம் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையாக செல்கிறது. அதற்கு மேலே சரக்குக் கப்பல்கள் சாதாரணமாக கடந்து செல்லும். சுரங்கப் பாதையின் இருபுறமும் இரு செயற்கைத் தீவுகளையும் உருவாக்கி அசர வைத்துள்ளார்கள் சீன பொறியாளர்கள்.

எட்டு ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் வந்தாலும், மணிக்கு 340 கிலோ மீட்டர் வேகத்தில் புரட்டிப்போடும் புயல் காற்று வீசினாலும், இதை 120 வருடங்களுக்கு அசைக்க முடியாது என பாலத்தில் அடித்து சத்தியம் செய்கிறது சீனா. பேருந்துகளுக்கும், வர்த்தக ரீதியான வாகனங்களுக்கும் மட்டுமே இந்த பாதை திறக்கும். அது தவிர்த்து தனியார் வாகனங்கள் முன்கூட்டியே அனுமதி பெற்றால்தான் இதில் பயணிக்க முடியும். 

2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நீண்ட இந்த பாலத்தின் கட்டுமான பணிக்கு  20 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.

உலகின் மிக நீள கடற்பாலமாக கருதப்படும் இந்த பாலம் தென்சீனக்கடலில் சுமார் 56,500 சதுர கி.மீ. பகுதியையும், அதை சூழ்ந்துள்ள 11 நகரங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. தென்சீனக்கடலை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் இந்த பாலத்தை கட்டியுள்ளது.

68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பெரும் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை விமர்சகர்கள் ’வெள்ளை யானை’ என்று அழைக்கிறார்கள்.

2018 செப்டம்பர் உலக நிகழ்வுகள்

-------------------------------------------------------------
இலங்கை நிகழ்வுகள்
-----------------------------
*=> அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம் தனிநபர் சட்ட மூலமாக பாராளுவமன்றத்தில் பாராளுவமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.(05.09.2018)

*=>ஆசிய வலைப்பந்து போட்டியில் இலங்கையின் மகளிர் அணி சம்பியனானது. மொத்தமாக இலங்கை அணி 5 கிண்ணங்களை வென்றுள்ளது. (1989,  1997, 2001, 2009, 2018)

*=>ஐரோப்பிய ஒன்றியத்தால் துணிகளுக்கு விதிக்கப்படும் VAT வரி 15 வீதத்தில் இருந்து 05 வீதமாக குறைக்கப்பட்டது. 

*=>முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருதான Commandeur de la Legion D’Honneur விருது வழங்கப்பட்டது. பிரான்ஸின் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோனின் சார்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ இந்த விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் வழங்கினார்

*=>பாராளுவமன்ற நிலையியற் கட்டளையை மீறிச் செயற்பட்டமை தொடர்பில் பாராளுவமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, பிரசன்ன ரணவீர ஆகியோருக்கு பாராளுவமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. பா.உ விமல் வீரசன்சவுக்கு இரண்டு வாரங்களும் பா.உ பிரசன்ன ரணவீரவுக்கு நான்கு வாரங்களும் இந்த தடை விதிக்கப்பட்டது. 

*=>ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமானது. இதில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன விசேட உரையாற்றினார்.

உலக நிகழ்வுகள்
*=>4ஆவது சர்வதேச ஆயுள்வேத காங்கிரஸ் நெதர்லாந்தில் செப்டம்பர் 1இல் ஆரம்பமானது. 

*=>ஜெபி சூறாவளி ஜப்பான், மரியானா தீவுகள், தாய்வானைத் தாக்கியது. இதில் 17 பேர் கொல்லப்பட்டனர். 

*=>பாக்கிஸ்தானின் ஜனாதிபதியாக ஆரிப் அல்வி பதவியேற்றுக் கொண்டார்.

*=>சர்வதேச பெண் முயற்சியாளர்கள் மாநாடு நேபாளத்தில் நடைபெற்றது.

*=>கடல் நீர் , கால நிலை போன்றவற்றை ஆராய்ச்சி செய்ய HY-1C எனப்படும் செயற்கைக் கோளை சீனா விண்வெளிக்கு ஏவியது. இந்த செயற்கைக் கோள் சமுத்திரங்களின் நிறம், தண்ணீரின் வெப்பநிலை போன்றவற்றை ஆராய்ச்சி செய்யவுள்ளது. 

*=>52 ஆவது எழுத்தறிவு தினம் செப்டம்பர் 08 இல் கொண்டாடப்பட்டது.

*=>அனைத்துண்ணி சுறா இனம் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

*=>அலிபாபா தலைமைப் பொறுப்பிலிருந்து அதன் நிறுவுனர் ஜெக் மா (Jack Ma) 2019இல் ஓய்வு பெறவுள்ளார். அலிபாபாவின் தற்போதைய CEO வான Daniel Zhang தலைமைப் பதவிக்கு செல்லவுள்ளார்.

*=>அமெரிக்க பகிரங்க கலப்பு இரட்டையர் போட்டியில் Bethanie Mattek- Sands, Jamie Murray ஆகியோர் கிண்ணம் வென்றனர்.

*=>உலக தற்கொலைக்கு எதிரான தினம் செப்டம்பர் 10 இல் கொண்டாடப்பட்டது. 2018இற்கான தொனிப்பொருள் தற்கொலையைத் தடுப்பதற்கு ஒன்றாக வேலை செய்வோம் என்பதாகும்.

*=>செப்டம்பர் 10-16 வரை நடைபெற்ற பிம்ஸ்டெக் (BIMSTEK) அமைப்பின் இராணுவ பயிற்சியை (MILEX) நேபாளம் புறக்கணித்தது. இந்தப் பயிற்சி இந்தியாவின் மகாராஷ்டிராவின் புனே இல் நடைபெற்றது.

*=>அமெரிக்கப் பகிரங்க டெனிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டியில் சேர்பியாவின் ஜெக்கோவிச் கிண்ணம் வென்றார். இது அவரது மூன்றாவது அமெரிக்கப் பகிரங்க போட்டியின் பதக்கமாகும். அத்துடன் இது அவரது 14 ஆவது கிரான்ட்ஸ்லாம் பதக்கமாகும்.

*=>அமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒஸாக்கா ( Naomi Osaka)பதக்கம் வென்றார். கிரான்ட்ஸ்லாம் பதக்கத்தை வென்ற முதல் ஜப்பானியர் ஒஸாக்கா என்பது குறிப்பிடத்தக்கது. 

*=>புளோரன்ஸ் சூறாவளி அமெரிக்காவின் தென்கிழக்குப் பிரதேசங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. 2018 இல் அத்திலாந்திக் சமுத்திரத்தில் உருவாகிய பெரிய சூறாவளி புளோரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புயலின் காரணமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா அதிகமாக பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது. அங்கு 11 பேர் இந்த சூறாவளிக்குப் பலியாகியுள்ளனர்.

*=>செப்டம்பர் மாதத்திற்கான ICC யின் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்தும் முதலாமிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

*=>ஜனநாயகத்திற்கான சர்வதேச தினம் செப்டம்பர் 15 இல் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருள் Democracy under Strain : Solution for Changinng World என்பதாகும்.

*=>மங்குட் சூறாவளி(Mangkhut) பிலிப்பைன்ஸ், தாய்வான், ஹொங்கொங்கில் பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

*=>ஐதரசனால் வலுவூட்டப்பட்ட ரயில் சேவையை ஜேர்மனி ஆரம்பித்தது.இந்த ரயிலின் பெயர் Coradia iLint train 

*=>வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் தென்கொரிய தலைவர் மூன் ஜா இன் ஆகியோர் அணுச் சோதனையை நிறுத்துவது சம்மந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இருவரும் வடகொரிய தலைநகரில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

*=>ஜப்பானின் MINERVA-II1 விண்கலம்  வெற்றிகரமாக Ryugu குறுங்கோளில் தரையிறங்கியது. 

*=>வியட்நாமின் ஜனாதிபதி Tran Dai Quang மரணமடைந்தார்.

*=>ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்களாதேஸை 3 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இந்தியா கிண்ணத்தை வென்றது. இது இந்தியாவின் 7 ஆவது ஆசியக் கிண்ண வெற்றியாகும். மேன் ஒப் வ மெச் Liton Das , தொடர் நாயகன் - Shikhar Dhawan

*=>பிரேசில் உதைப்பந்தாட்ட அணியின் நிரந்தர தலைவராக நெய்மர் நியமிக்கப்பட்டார்.

*=>1440 ஆவது இஸ்லாமிய ஆண்டு ஆரம்பமானது. 

*=>ஹங்கேரிக்கு எதிரான கண்டனத் தீர்மானம் ஐரோப்பிய பாராளுவமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

*=>கடந்த ஒகஸ்டில் குடிபோதையில் கார் ஓட்டியமை தொடர்பான வழக்கில் பிரான்ஸ் கால்பந்து அணித்தலைவர் ஹியுகோ லோரி ஸ்_க்கு 20 மாத போட்டித் தடை மற்றும் 7000 பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டது. 

*=>மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் அல் ரசாக் கைது செய்யப்பட்டார். அரசுக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனமொன்றில் பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்தமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டார்.

*=>ஜப்பானின் பிரதமர் ஷின்சு அபே அந்நாட்டு ஆளுங்கட்சி தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஜப்பானின் பிரதமராக பணியாற்றும் வாய்ப்பை இவர் பெறுகின்றார்.

*=>ஊழல் குற்றச்சாட்டில் பத்து ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மேன்முறையீடு செய்ததை அடுத்து பாக்கிஸ்தானின் உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. இவர்கள் ஏற்கனவே இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

*=>மாலைதீவின் ஜனாதிபதியாக இப்றாகிம் முஹம்மட் சொலி தெரிவுசெய்யப்பட்டார். இவர் மாலைதீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இவர் பொது எதிரணி வேட்பாளராகக் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது. 

*=>பீபாவின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் என்ற விருதை குரோஷிய அணித் தலைவர் லூகா மொட்ரிச் பெற்றார். 2018 உலகக்கிண்ணத் தொடரில் தங்கக் கால்பந்து இவருக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரேசிலைச் சேர்ந்த மார்டா என்பவருக்கு சிறந்த பெண் வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டது.

பாதுக்க

சர்வதேச நிறுவனங்களின் தலைமைச் செயலகங்கள்..


1. ஐக்கிய நாடுகள் சபை - நியுயோர்க்
2. யுனெஸ்கோ - பாரிஸ்
3. யுனிசெப் - நியுயோர்க்
4. உலக வங்கி -  வாஷிங்டன் 
5. உலக சுகாதார தாபனம் - ஜெனிவா 
6. செஞ்சிலுவை சங்கம் - ஜெனிவா
7. பன்னாட்டு அனுசக்தி கழகம் - வியன்னா
8. உணவு மற்றும் விவசாய நிறுவனம் - ரோம்
9. ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் நிறுவனம் - நைரோபி
10. உலக கடல் நிறுவனம் - லண்டன் 
11. ஐரோப்பிய கழகம் - புரூசெல்ஸ்
12. ஆசிய வளர்ச்சி வங்கி - மணிலா
13. சார்க் - காத்மண்டு 
14. பன்னாட்டு வர்த்தக நிறுவனம் - ஜெனிவா
15. உலக நிதி அமைப்பு - வாஷிங்டன்
16. பன்னாட்டு நீதிமன்றம் - தி ஹேக் 
17. உலக தொழிலாளர் நிறுவனம் - ஜெனிவா
18. ஆசியான் - ஜகார்த்தா 
19. ஐ.நா தொழில் வளர்ச்சி திட்டம் - வியன்னா 
20. நேட்டோ - புரூசெல்ஸ்

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...