Saturday, December 1, 2018
உலகின் மிக நீண்ட கடல் பாலம்!
உலகிலே மிகப்பெரிய கடல் பாலத்தை திறந்து வைத்தது சீனா.
சீனாவில் இருந்து கடல் வழியாக ஹொங்கொங் செல்வதற்காக கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்ட கடல்பாலம் செவ்வாய் (23.10.2018) அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
55 கிலோமீற்றர் நீளமான குறித்த கடல் பாலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங், மக்காவ் நகரங்களை பிரதான சீனாவின் ஜூகாய் நகரை இணைக்கும் இந்த பாலம் நிலத்தை தொடாமல் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத பாம்பு போல நீண்டு கிடக்கிறது. இதிலும் 6.7 கிலோ மீட்டர் பாலம் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையாக செல்கிறது. அதற்கு மேலே சரக்குக் கப்பல்கள் சாதாரணமாக கடந்து செல்லும். சுரங்கப் பாதையின் இருபுறமும் இரு செயற்கைத் தீவுகளையும் உருவாக்கி அசர வைத்துள்ளார்கள் சீன பொறியாளர்கள்.
எட்டு ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் வந்தாலும், மணிக்கு 340 கிலோ மீட்டர் வேகத்தில் புரட்டிப்போடும் புயல் காற்று வீசினாலும், இதை 120 வருடங்களுக்கு அசைக்க முடியாது என பாலத்தில் அடித்து சத்தியம் செய்கிறது சீனா. பேருந்துகளுக்கும், வர்த்தக ரீதியான வாகனங்களுக்கும் மட்டுமே இந்த பாதை திறக்கும். அது தவிர்த்து தனியார் வாகனங்கள் முன்கூட்டியே அனுமதி பெற்றால்தான் இதில் பயணிக்க முடியும்.
2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நீண்ட இந்த பாலத்தின் கட்டுமான பணிக்கு 20 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
உலகின் மிக நீள கடற்பாலமாக கருதப்படும் இந்த பாலம் தென்சீனக்கடலில் சுமார் 56,500 சதுர கி.மீ. பகுதியையும், அதை சூழ்ந்துள்ள 11 நகரங்களையும் உள்ளடக்கி இருக்கிறது. தென்சீனக்கடலை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் இந்த பாலத்தை கட்டியுள்ளது.
68 மில்லியன் மக்களை இணைக்கும் இந்த பாலம், சுற்றுலாப் பயணிகள் எளிதாக கடந்து செல்ல வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை விமர்சகர்கள் ’வெள்ளை யானை’ என்று அழைக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
#உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...
-
For principal service and sleas 1) இல்ங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது? : மத்துகம 2)மத்திய மகாவித்தியால...
-
*கல்வி தொடர்பான மாநாடுகள்* 1- *"ஜொம்ரியன் மாநாடு* " இதன் நோக்கு "யாவருக்கும் கல்வி " 1990 ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற...
-
01. ஆக்சிஜன் எந்த வெப்ப நிலையில் திரவமாகி விடும் : -183 டிகிரி சி 02. இந்தியாவில் பென்சிலின் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது : கிம்பிடி,...
No comments:
Post a Comment