Monday, July 22, 2019

#மாபெரும்_வெற்றி.. #சந்திராயன் 2 விண்கலத்துடன் #வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது #ஜிஎஸ்எல்வி 

#ISRO #Chandrayaan2
As our journey begins, do you know what is the distance of Moon from Earth? The average distance is 3, 84, 000 km, Vikram lander will land on Moon on the 48th day of the mission, which begins today.
Here's different view of #GSLVMkIII-M1

சந்திரயான் 2 விண்கலத்தை சுமந்து கொண்டு #ஜிஎஸ்எல்வி_மார்க் 3 ராக்கெட் வெற்றிகமாக விண்ணில் சீறிப்பாய்ந்துள்ளது. இன்று நிலவுக்கு தனது பயணத்தை துவக்கியுள்ள சந்திரயான் 2 விண்கலம் #செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும்.

உலகிலேயே முதல் முறையாக #நிலவின் #தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 15-ம் தேதி ஏவும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான #இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டு இருந்தது
ஆனால் ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன் அதில் #கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் கவுண்டவுன் திடீர் என நிறுத்தப்பட்டு சந்திரயான்-2 விண்கல பயணமும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த பணி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து, விண்ணில் பாய்வதற்கு ராக்கெட் தயாரானது. இதனையடுத்து நேற்று மாலை மீண்டும் கவுண்டவுன் துவக்கப்பட்டது

சந்திரயான் 2 விண்கலத்தை ஏவ ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் 20 மணி நேர அளவு நேற்று மாலை 6.43-க்கு தொடவங்கியது. இதனையடுத்து சரியாக இன்று பிற்பகல் 2.43 மணிக்கு, #சந்திரயான் விண்கலத்தை சுமந்து கொண்டு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
 கடந்த 15-ம் தேதி செய்யப்பட்ட முதல் முயற்சியை போல இம்முறை ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என உறுதிபட கூறியிருந்தார். ஒருவாரம் தாமதமாக புறப்பட்டாலும் ஏற்கனவே திட்டமிட்டப்படி செப்டம்பர் 6 அல்லது 7ம் தேதி சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து #விக்ரம்_கலமும், பிரக்யான் ஆய்வு கலமும் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு கலங்களும் நிலவின் தென்துருவத்தில் தரையிரங்குவது முதல், இடைவிடாமல் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளன. அதே நேரத்தில் சந்திராயன் 2 விண்கலம் ஓராண்டு காலம் நிலவை சுற்றி வந்து முப்பரிமாண படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் பணியை செய்யும்.

#உலக_நாடுகள் யாருமே இதுவரை ஆராய்சி செய்யாத நிலவின் தென்துருவத்தை நோக்கி சந்திரயான் 2 விண்கலம் இன்று தனது பயணத்தை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, May 18, 2019

1. இலங்கையில் திண்மக்கழிவுகளை அகற்றும் தேசிய திட்டத்தின் பெயர் என்ன? 
பிளிசரு

2. இறுதியாக  அமெரிக்காவில் தூதரகத்தை அமைத்த நாடு எது ?
சவுதிஅரேபியா

3. சிறு நீர்த்தடுப்புத் தொடர்பாக  ஜனாதிபதியின் விசேட  செயலணியின் தலைவர் யார்? 
அசலே இத்வேல

4. தெற்கு அதிவேகப் பாதையின் ஆரம்ப  இடம் யாது ? 
கொழும்பி - கொட்டாவ

5. வடகொரிய  ஜனாதிபதியின் சகோதரர் கொலைக்கு பயன்படுத்தியதாகக் கருதப்படும் மருந்தின் பெயர் என்ன?  
VX திராவகம்

Saturday, April 27, 2019

மீண்டும் உலகை உலுக்கிய மாபெரும் கொடுமை வீதி வீதியாக கதறிய மக்கள்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிபத்திற்கு உள்ளாகி பேரழிவைச் சந்தித்துள்ள பழமையான ’நோட்ரே டேம் கேதட்ரல் (Notre-Dame-de)’ தேவாலயமானது மாபெரும் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாக விளங்குகின்றது.

இதன் வரலாற்றுப் பின்னணி குறித்து வெளியான தகவலின்படி,

1163 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதுவும் Maurice de Sully பேராயரின் பெரும் அழுத்தத்தின் பேரில், போப்பாண்டவர் அலெக்சாண்டர் III முன்னிலையில் இந்த அடிக்கல் நாட்டப்பட்டது.

தொடர்ச்சியாக இரண்டு நூற்றாண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ச்சியாக இந்தத் தேவாலயம் பல சோதனைகளைச் சந்தித்தாலும், பரிஸ் மக்களின் சாட்சியமாக எட்டு நூற்றாண்டுகளைக் கடந்து வந்துள்ளது.

இதற்கு முன்னர், முக்கிய தேவாலயாக விளங்கிய Saint-Etienne தேவாலயம், பெருந்திரளான மக்களை உள்ளடக்க முடியாமல் திணறிய நிலையில், பெருந்தொகையான மக்கள் வாழ்ந்து வந்த பரிஸ் நகரத்தில் நோத்ர-தாம் தேவாலயத்தைக் கட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

1200 ஆம் ஆண்டில் இருந்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கிய பரிஸ் நகரத்தில், 200000 மக்கள் வாழ்ந்து வந்தனர். இது மிகவும் பெரிய சனத்தொகை என்பதால் இது இங்கு கட்டப்பட்டது.

1804ஆம் ஆண்டிலிருந்து இருந்து, அதாவது, நெப்போலின் காலத்தில் இருந்து மிகவும் பிரபல்யம் அடைந்த இந்தத் தேவாலயம், இன்று மில்லியன் கணக்கிலான உல்லாசப் பயணிகளை ஈர்த்து வந்துள்ளது.

இந்த பின்னணியில் மிகப்பெரும் வரலாற்றுப் பின்னணியைக்கொண்ட இந்த தேவாலயத்தின் பேரழிவால் பாரிஸ் மக்கள் பலரும் வீதியில் நின்று கதறியழுத சம்பவம் உலக மக்களையே உலுக்கியுள்ளது.

Friday, April 26, 2019

உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன[4] :பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (MIGA), பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID)

உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.

தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியத்தையும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் "பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்" என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இந்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று.
உலக நிகழ்வுகள் ஆகஸ்ட் 2018
"""""""""""""""""
இலங்கை
------------------
*. புதிய தபால் மா அதிபராக ரஞ்சித் ஆரியரத்ன பதவியேற்றுக் கொண்டார்.

*. ஈரல் மாற்று சிகிச்சையொன்று கண்டி வைத்தியசாலையில் முதன் முதலாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

*. ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Ondera )05 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்தார்.

*. பாராளுவமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோல்வியடைந்தது. இந்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டன. எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் குழுவொன்று சபாநாயகரால் நியமிக்கப்பட்டது. R.M.H.L ரத்நாயக்க,  பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை , கலாநிதி A.S.M. நௌபல் ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

*. இந்து சமுத்திர மாநாடு வியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெற்றது. ‘பிராந்தியத்தின் புத்தாக்கத்தை கட்டியெழுப்புதல்’ என்ற தொனிப்பொருளில் இது நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாநாட்டில் உரையாற்றினார்.

*. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை அமுல்படுத்தியது. வாகனத் தொழில் துறை , தங்கம் மற்றும் ஏனைய சில உலோகங்கள் மீது அமெரிக்காவின் இந்த தடை அமுலாகியது. ஈரான் மீதான அமெரிக்காவின் இரண்டாவது பொருளாதாரத்தடை எதிர்வரும் நவம்பர் மாதம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

*. சவூதி கைது செய்த சமார் படாவி ( Samar Badawi )உட்பட பெண்னுரிமை மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை விடுவிக்க கனடா கோரியதால், கனடாவுடனான வர்த்தக மற்றும் முதலீடுகளை சவூதி முடக்கியது. அத்துடன் கனடா தூதுவரையும் 24 மணி நேரத்தில் வெளியேறுமாறு உத்தரவிட்டதுடன் தனது நாட்டுத் தூதுவரையும் சவூதி திரும்பப் பெற்றுக் கொண்டது. அத்துடன் கனடாவுடனான நேரடி விமானப் போக்குவரத்தையும் சவூதி இடைநிறுத்தியது. கனடாவில் மருத்துவச் சிகிச்சை பெற சவூதியருக்குத் தடையும் விதிக்கப்பட்டது. 

*. தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி தனது 95 ஆவது வயதில் காலமானார். இவர் ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

*. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பதவிக்கு சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிசெல் பசேல்ட் நியமிக்கப்படுவதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டனியோ குட்டரஸ் அறிவித்தார்.

*. பாக்கர் சூரிய ஆய்வுகலன் என்ற விண்கலத்தை நாசா விண்ணுக்கு ஏவியது. சூரிய காற்று, சூரியனின் நிலையான பொருட்கள், சூரிய ஒளி வட்டத்தின் வெப்ப நிலை பற்றி இது ஆராயவுள்ளது. 

*. இந்தோனேசியாவின் லொம்பொத் தீவில் ஏற்பட்ட பூகம்பத்தில் அண்ணளவாக 400 பேரளவில் பலியாகினர். 

*. நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி. எஸ் நைபால் லண்டனில் காலமானார்.

*. உலகில் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முதலிடத்தை ஆஸ்திரியாவின் வியன்னா நகரமும் இரண்டாம் இடத்தை அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரமும் பெற்றுக் கொண்டன. கடைசி இடத்தை சிரியாவின் டமஸ்கஸ் பெற்றுக் கொண்டது. 

*. இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார். 1996இலும் 1998 இலிருந்து 2004 வரையும் இந்தியாவின் பிரதமராக இவர் பதவி வகித்தார்.

*. இந்தியாவின் கேரளாவில் ஏற்பட்ட மழை, வெள்ளம், காற்று காரணமாக அண்ணளவாக 400 பேர் மரணமடைந்தார்கள். 

*. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் 80 வயதில் காலமானார். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் 7 ஆவது செயலாளராக கடமையாற்றியவராவார்.1997 தொடக்கம் 2006 வரை இவரது பதவிக் காலமாகும்.

*. பாக்கிஸ்தானின் 22 ஆவது பிரதமராக இம்ரான்கான் பதவியேற்றார். பாக்கிஸ்தானின் பாராளுவமன்றத் தேர்தல் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. ‘பாக்கிஸ்தான் தெஹ்ரீக் எ இன்சாப’; இவரது கட்சியாகும்.

*. வெனிசூவேலாவில் புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. டீள.ளு

*. கட்சித் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கம் டேர்ன்பல் தனது பதவியை இராஜிநாமா செய்தார். புதிய பிரதமராக ஸ்கொட் மோரிசன் பதவியேற்றார்.

*. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மெக்கெய்ன் மரணமானார். 2008 ஜனாதிபதித் தேர்தலில் இவர் வேட்பாளர் பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

*. உலகக்கிண்ண கரம் ஆடவர் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து இலங்கை அணி வெற்றி பெற்றது. மகளிர் பிரிவில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
ஜூன் மாத உலக நிகழ்வுகள்

இலங்கை நிகழ்வுகள் 

• பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 97 வாக்குகளைப் பெற்ற ஆனந்த குமாரசிறி சபாநாயகராக பதவியேற்றார். இவர் இலங்கையின் 29 ஆவது பிரதி சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது.

• சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வு கேகாலையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. ‘பிளாஸ்டிக் பாவணையால் ஏற்படும் சுற்றாடல் மாசடைவைத் தடுப்போம்’ என்ற தொனிப் பொருளில் இது நடைபெற்றது.

• இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டது. இதில் 2.6 KM பரப்பளவை உடைய கொழும்பு துறைமுக நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பரப்பளவு 612.99 KM ஆக அதிகரித்துள்ளது.

• நடைமுறையிலுள்ள அனைத்து தொழிற்சட்டங்களையும் ஒன்றாக இணைத்து புதிய தொழிற்சட்டமொன்றை ஆக்க அமைச்சரவை அரசாங்கத்திற்கு அனுமதி அளித்தது.

• மண்ணெண்ணையின் விலை 70 ரூபாவாக குறைக்கப்பட்டது. 

• வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 29 மில்லியன் ரூபாய்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியது.

• இலங்கையின் தபால் கட்டணங்கள் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன. 

உலக நிகழ்வுகள்

• ஸ்பெய்னின் பிரதமராக சோஷலிசக் கட்சியின் தலைவர் பெட்ரோ சன்செத் பதவியேற்றார். பதவிப்பிரமாணத்தை மன்னர் பெல்லீப்பெ செய்து வைத்தார்.; ஸ்பெய்னின் பிரதமர் மரியானா ரஜோயிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றதையடுத்து அவர் பதவி விலகினார். இதை அடுத்தே இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றள்ளது.

• சவூதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

• I Phoneஇன் IOS 12 இயங்குதளம் வெளியிடப்பட்டது. இவ்வருட இறுதியில் வாடிக்கையாளர்கள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.

• ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு புதிய உறுப்பு நாடுகள் சேர்க்கப்பட்டன. ஜேர்மனி , பெல்ஜியம், தென்னாபிரிக்கா , டொமினிக்கன் குடியரசு, இந்தோனேசியா என்பவையே அவை. இவற்றின் பதவிக்காலம் 2019 ஜனவரியில் ஆரம்பிக்கின்றன. 5 நாடுகளின் பதவிக் காலம் 2018 உடன் முடிவடைவதால் புதிய 5 நாடுகள் சேர்க்கப்படுகின்றன. 2 ஆண்டு காலத்திற்கு இவை உறுப்பினர்களாக தொழிற்படவுள்ளன. சீனா, பிரான்ஸ், ரஸ்யா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நிரந்தர நாடுகள் உட்பட 15 நாடுகளை ஐ.நா பாதுகாப்புச் சபை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. 

• பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அண்மைக்கால தாக்குதல் சம்மந்தமாக இஸ்ரேல் மீது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 120 நாடுகளின் ஆதரவுடன் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ் அமைப்பின் மீது குற்றம் சாட்டும் அமெரிக்காவின் தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது. அரபு, முஸ்லிம் நாடுகள் சார்பில் அல்ஜீரியா மற்றும் துருக்கி என்பன ஐ.நா பொதுச் சபையில் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தன. 

• கொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் பழமைவாதியான இவான் டுகயி வெற்றி பெற்றார்.

• மெசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற மெசிடோனியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்தன. 

• வடகொரிய தலைவர் கிம் ஜொன் உன் சீனாவுக்கு விஜயம் செய்தார்.

• ஐ.நா மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. 

• போர்ப்ஸ் சஞ்சிகையின் உலகப் பணக்காரர் பட்டியலில் அமேசன் நிறுவுனர் ஜெப் பெசோஸ் முதலிடத்தைப் பெற்றார். இரண்டாம் இடத்தை பில்கேட்ஸும் மூன்றாம் இடத்தை முதலீட்டாளர் வெர்ரன் பப்பட் என்பவரும் பெற்றுக் கொண்டனர்.

• அமெரிக்காவின் உற்பத்திகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் வரி அறவிட தீர்மானித்தது. இந்தியாவும் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 % வரி விதிக்க தீர்மானித்தது. அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைக்கு பதிலடியாக இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 
• துருக்கியின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுவமன்றத் தேர்தல் ஆகியன ஒரே நாளில் நடைபெற்றன. தையிப் எர்டோகன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். பாராளுவமன்றத் தேர்தலில் எர்டோகானைத் தலைமையாகக் கொண்ட மக்கள் கூட்டமைப்பு வெற்றி பெற்றது. துருக்கியின் பிரதமர் பதவி ஜனாதிபதிப் பதவியாக மாற்றப்பட்டு எர்டோகான் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

விளையாட்டு நிகழ்வுகள் 
• 21 ஆவது உலக உதைப்பந்தாட்டப் போட்டிகள் ரஷ்யாவில் ஆரம்பித்தன. 22 ஆவது உலக உதைப்பந்தாட்டப் போட்டிகள் 2022 இல் கட்டாரிலும் 23 ஆவது உலக உதைப்பந்தாட்டப் போட்டிகள்  2026இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளிலும் நடக்கவுள்ளன.

• கரீபியன் தீவுகளைத் தாக்கிய இரட்டைப் புயலால் பாதிக்கப்பட்ட 5 மைதானங்களைப் புனரமைக்க நிதி திரட்டும் நோக்கில் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக பதினொருவர் அணிக்கும்( தலைவர் அப்ரிடி) மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான கிரிக்கட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
பாடசாலை கல்வி
1945- இலவச கல்வி ஆரம்பிக்கபட்டது.
1952- புலமை பரீசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
1956- சுய மொழிகள் போதனா மொழியாக்கப்பட்து.
1960- பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டது்
1980- இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டது.
1993- இலவச  சீறுடை வினியோகம்
2001- பாடசாலை கல்வி அமைச்சு உருவாக்கப்பட்டது.

உயர்கல்வி
1893- முதலாவது தொழிநுட்ப கல்லூரி
1921- லண்டன் பல்கலைகழக கல்லூரியுடன் இணைந்த வகையில் இலங்கை பல்கலைகழக கல்லூரி உருவாக்கப்பட்டது.
1942- இலங்கை பல்கலைகழக கல்லூரியையும், கொழும்பு மருத்துவ கல்லூரியும் இணைத்து இலங்கை பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
1978- இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
1980- இலங்கையில் திறந்த பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
1981-மகாபொல புலமை பரீசில் திட்டம் உருவாக்கப்பட்டது.

பொதுவான தகவல்கள
கட்டாய கல்வி வயதெல்லை- 5-16
கல்வி வலையங்கள்- 98
இலங்கை ஆசிரியர் சேவை ஆரம்பிக்கப்பட்டது- 1994
கல்வியலுக்காக தனிபீடம் இருக்கும் பல்கலைகழகம்- கொழும்பு

சார்க் வலைய நாடுகளில் கல்விக்காக அதிகம் நிதி ஒதுக்கும் நாடு- இலங்கை
*பாடசாலை வகைகள்* 

1) 1 AB schools 
2) 1C schools 
3) Type 2 schools 
4) Type 3 schools

1 AB பாடசாலைகள் என்பது உயர்தரத்தில் கலை, விஞ்ஞானம், வர்த்தகத் துறைகளைக் கொண்டிருக்கும். 

1 C பாடசாலைகள் என்பது கலை, வர்த்தகப் பிரிவுகளை மாத்திரம் கொண்டிருக்கும் 

Type 2 பாடசாலைகள் என்பது 1- 11 வரையான  வகுப்புக்களை or 1-9 வரையான வகுப்புக்களை கொண்டது 

Type 3 பாடசாலைகள் என்பது 1-5 வரையான வகுப்புக்களை கொண்டது.

இலங்கையின் மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை *10194* (2017 calculation )

இலங்கையில் அதிகமாக காணப்படும் பாடசாலை வகை - type 2

1 AB Schools - 1029
1 C Schools - 1818
Type 2 schools - 3288 (3300)
Type 3 schools - 4059

3மொழிகளிலும் கற்பிக்கும் பாடசாலைகளின் எண்ணிக்கை - 47

அதிகூடிய மாணவர்கள் தொகை கொண்ட பாடசாலை - 1AB (1,657,886)

அதிகுறைந்த மாணவர்கள் கொண்ட பாடசாலை - type 3

Thursday, April 25, 2019

SLEAS - General Examination - 2016

1) இலங்கையில் வாழ்க்கை செலவு சுட்டெண் எந்நிறுவனத்தினால் கணிக்கப்படுகிறது?
(1) நிதி அமைச்சு
(2) மத்திய வங்கி
(3) தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
(4) நுகர்வோர் அதிகார சபை

2) ஆசியாவில் மத சார்பற்ற நாடு? 
(1) பூட்டான்
(2) இந்தியா
(3) வங்காளதேசம்
(4) பாக்கிஸ்தான்

3) 'பொஹொகரம்' தீவிரவாத இயக்கம் எந்நாட்டில் இயங்குகிறது?
(1) லிபியா
(2) நைஜீரியா
(3) சோமாலியா
(4) சிரியா

4) இலங்கையில் தேயிலை செய்கையின் முன்னோடியாக விளங்கியவர்?
(1) தோமஸ் லிப்டன்
(2) ஜேம்ஸ் டெய்லர்
(3) ஜோன் டொய்லி
(4) எமர்சன் டெனன்ட்

5) இலங்கையில் வளி மாசடைதலை அதிகம் கொண்ட நகரம்?
(1) குருநாகல்
(2) கண்டி
(3) யாழ்ப்பாணம்
(4) காலி

6) )கலாசார அபிவிருத்திக்கான ஐ.நா அமைப்பு?
(1) UNICEF 
(2) UNESCO 
(3) UNHCR 
(4) ICAO

7) சம்பூர் மின் நிலையத்தால் உற்பத்தி செய்ய எதிர் பார்த்துள்ள மின்சாரத்தின் அளவு?
(1) 150 MW
(2) 250 MW
(3) 350 MW
(4) 500 MW

8) சிறுவர் உதவு சேவை தொடர்பு இலக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கம் யாது?
(1) 1919
(2) 1929
(3) 1954
(4) 1956

9) ஈர நிலப் பாதுகாப்பு உடன்படிக்கை எது?
(1) ரம்சார்
(2) மொன்றியல்
(3) கியோட்டோ
(4) வியன்னா

10) விண்வெளியில் அவதானிப்புகளை மேற்கொள்ள மிகப்பெரிய தொலைகாட்டி உருவாக்கி வரும் நாடு?
(1) ஜப்பான்
(2) பிரான்ஸ்
(3) சீனா
(4) அமெரிக்கா

11) இலங்கையின் 2015 மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின்படி தவறான கருத்து எது?
1) பிறப்பு வீதம் 1000 இற்கு 22
2) கலோரிநுகர்வு 2111
3) கல்வியறிவு 93.3%
4) ஆயுள் எதிர்பார்ப்பு 74.9

12) பின்வரும் ஆராய்ச்சிநினையஙள் தொடர்பான பிழையான சோடி?
(1) கறுவா - எல்பிட்டிய
(2) பனை -கைதடி
(3) தேயிலை -தலவாக்கலை
(4) ரப்பர் –அகலவத்தை

13) இலங்கையர் அல்லாதோர் இலங்கைக்கு ஆற்றிய சேவைக்காக வழங்கப்படும் விருது எது?
(1) லங்காபிமான்ய
(2) ஸ்ரீ லங்காரத்ன
(3) தேசபந்து
(4) லங்காதிலக

14) 8 million ற்கும் மேற்பட்ட சுற்றுலா பய ணிகள் வருகை தந்த நாடு எது?
(1) பிரான்ஸ்
(2) ஜேர்மனி
(3) ஐக்கிய ராச்சியம்
(4) அமெரிக்கா

15) சார்க் நாடுகள் எதிகொள்ளும் பிரதான பிரச்சினை எது?
(1) உள் முரண்பாடுகள்
(2) பயங்கரவாதம்
(3) வறுமை
(4) வேலையின்மை

16) புதிய மனிதனைக் கட்டியெளுப்புதல் எனும் எண்ணக்கரு எந்த புரட்சியின் பின்னர் ஆரம்பமானது?
(1) பிரஞ்சு
(2) ரஷியன்
(3) சீன
(4) கியூபா

17) மேல் நாட்டு கல்வி முறையிலிருந்து அபிரிக்காவை மையமாகக் கொண்ட கல்விமுறையை தாபிப்பதில் அரும்பாடுபட்ட தலைவர் யார்?
(1) கவயே நிக்காமா
(2) ஜுலியஸ் நியரேரே
(3) ஜோடோ கென்யாமா
(4) நெல்சன் மண்டேலா

18) எந்த நாட்டுடன் இலங்கை சமீபத்தில் விளையாட்டு, நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது?
(1) சீனா
(2) ஜேர்மனி
(3) ஜப்பான்
(4) ஐக்கிய ராஜ்யம்

19) இலங்கையில் வீதிகளை அமைப்பதில் முன்னின்ற ஆளுனர் யார்?
(1) எட்வர்ட் பார்ன்ஸ்
(2) ஹென்றி வார்ட்
(3) ரொபர்ட் பிறவுண்றிக்
(4) வில்லியம் கிரகரி

20) "This is one small step for a man,but one giant leap for mankind. " என்ற பிரபலமான கருத்தை கூறியவர் யார்?
(1) யூரி ககாரின்
(2) ஜோன் க்ளென்
(3) நீல் ஆம்ஸ்ட்ராங்
(4) வெலென்டினா டெரஸ்கோவா 

21) நீர்வள நாகரிகத்தின் உன்னத படைப்பு?
(1) கலிங்கல்
(2) கலிங்கற் தொட்டி
(3) அணை
(4) அலை தாங்கி

22) அண்மையில் அதிகம் புகழிட கோரிக்கையாளர்களை ஏற்றுக்கொண்ட நாடு?
(1) இத்தாலி
(2) துருக்கி
(3) பிரான்ஸ்
(4) ஜேர்மனி

23) தன்னை உலக குடிமகன் என கூறிய கிரேக்க சிந்தனையாளர்?
(1) சோக்ரடீஸ்
(2) பிளேட்டோ
(3) அரிஸ்டோட்டில்
(4) பைதகரஸ்

24) பின்வருவனவற்றுள் பொருத்தமற்ற சோடியை தெரிவு செய்க.
(1) மார்ட்டின் குரோவ் -விளையாட்டு
(2) ஹோவர்ட் கார்னர் -தொல்பொருள் 
(3) பெர்னாட் ஷா -மருத்துவ விஞ்ஞானம்
(4) ஹரோல்ட் கூட்டங்கள் - அரசியல் விஞ்ஞானம்

25) இலங்கையில் உள்ள மரபுரிமை இடங்கள் எத்தனை?
(1) 5
(2) 6
(3) 7
(4) 8
26) உலக எழுத்தறிவாளர் தினம்?
(1) செப்டம்பர் 08
(2) ஒக்டோபர் 08
(3) நவம்பர் 08
(4) டிசம்பர் 08

27) சுமோ விளையாட்டுக்கு பிரபல்யமான நாடு எது?
.....................................................................................................................................................................................
28) புருட்டஸின் பாத்திரத்தை சித்தரிக்கும் வில்லியம் சேக்ஸ்பியரின் பிரபல்ய நாடகம்?
…………………………………………………………………………………………………………………
29) 2016 ஜனவரி உலக பொருளாதார மாநாடு இடம்பெற்ற இடம்?
……………………………………………………………………………………………………………………………………………………..
30) 2016 ஒலிம்பிக் நடைபெறவுள்ள நாடு?
………………………………………………………………………………………………………………………………………………….....
31) 'சியாட்டெல்' எத்துறையில் பிரபலம் பெற்றிருந்தார்?
……………………………………………………………………………………………………………………………………………………..
32) ஐரோப்பிய மறுமலர்ச்சி காலத்தில் பல்வேறு புத்தாக்கங்களை படைத்த அறிஞர்?
……………………………………………………………………………………………………………………………………………………..
33) GSP வரி சலுகையை வழங்கும் அமைப்பு?
……………………………………………………………………………………………………………………………………………………..
34) அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புவியை ஒத்த கோள்?
………………………………………………………………………………………………………………………………………………….....
35) யுனானி மருத்துவத்துறை இந்நாட்டுக்கு எந்நாட்டவரால் அறிமுகம் செய்யப்பட்டது?
……………………………………………………………………………………………………………………………………………………..
36) சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான தரைப்பகுதியில் அமைந்துள்ள பெரிய நாடு?
……………………………………………………………………………………………………………………………………………………..
37) தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்திற்கு பிரசித்தி பெற்ற அமெரிக்க பிரதேசம்? 
……………………………………………………………………………………………………………………………………………………..
38) வாகன நெரிசலுக்கான தீர்வாக முதன்முதலாக மோட்டார் கார்கள் அற்ற எனும் முறையை அறிமுகம் செய்த நகரம்? 
……………………………………………………………………………………………………………………………………………………..
39) 1990 ல் ஜொமிதியன் கல்வி உச்சி மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்வதேச கல்வியின் பிரதான கருப்பொருள்? 
……………………………………………………………………………………………………………………………………………………..
40) இலங்கையின் பாடசாலை கல்வியை வேலை உலகுடன் தொடர்புபடுத்த மேற்கொள்ளப்பட்ட முதலாவது செயற்றிட்டம்?
……………………………………………………………………………………………………………………………………………………..
41) கல்விப்புலத்தில் ஈடுபடுபவர்களுக்காக ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பின் கல்வி பட்டங்களை வழங்கும் பல்கலைக்கழகம் அல்லாத இலங்கையில் உள்ள நிறுவனம்? 
……………………………………………………………………………………………………………………………………………………..
42) இலங்கை அரசின் சட்டம் தொடர்பான உத்தியோகபூர்வ மதியுரைஞர்?
……………………………………………………………………………………………………………………………………………………..
43) கல்வியின் நான்கு தூண்களில் நான்காவது தூண் எது?
……………………………………………………………………………………………………………………………………………………
44) பிக்கொ மீற்றர், மீற்றரில் எதனை பங்காகும்?
……………………………………………………………………………………………………………………………………………………..
45) அண்மையில்  காலமாகிய உலகப் புகழ் பெற்ற இந்திய சித்தார் வாத்திய கலைஞர் யார்?
………………………………………………………………………………………………………………………………………….....
46) 19ஆம் அரசியல் திருத்தத்திற்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்களை ஜனாதிபதிக்கு சிபார்சு செய்யும் முறைமை எது?
.....................................................................................................................................................................................
*கல்வி தொடர்பான மாநாடுகள்* 

1- *"ஜொம்ரியன் மாநாடு* " இதன் நோக்கு "யாவருக்கும் கல்வி " 1990 ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்றது. 155 நாடுகள் கலந்து கொண்டன. கல்வி தொடர்பான முதலாவது மாநாடு இதுவே.

2- *"டெல்லி பிரகடனம்* " 1993 இந்தியாவில் நடைபெற்றது. 

3- " *உலக கல்வி மன்றம்* "- டாகார் மாநாடு. 2000 ஆண்டு செனகல் நாட்டில் நடைபெற்றது. 

4- " *மிலேனிய உச்சி மாநாடு* " 2000 ஆண்டு 189 நாடுகளுடன் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றது. இதில் இலங்கையும் அங்கத்துவம் வகித்தது. இதன் இலக்கு "ஆரம்பக் கல்வி மேம்பாடு, பால் சமத்துவம் பேணல்"
உலக நிகழ்வுகள்
மார்ச் 2019

விமானப்படையின் 68 ஆவது நிறைவு நிகழ்வு ஹிங்குராங்கொடையில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடனை மேலும் ஒரு வருடமாக நீடித்தது. ( 3 வருடத்திலிருந்து 4 வருடங்கள்).

சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட தலைவர்களுக்கு சீனா விருதளித்து கௌரவித்தது. இதில் சீனாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் ஷானி கருணாரத்னவும் உள்ளடங்குகிறார். 

பங்களாதேசின் கடற்படைக் கப்பலான தலேஷ்வரி எனும் கப்பல் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை தந்தது. 

நோர்வே வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் இராஜாங்க செயலாளர் மெரியான் ஹேகன் இருநாள் விஜயம் மேற்கொண்டு  இலங்கை வந்தார். 

இலங்கையின் 73 ஆவது வரவுசெலவுத்திட்டம் பாராளுவமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் 43 ஆதரவாக வாக்குகள் கிடைத்தன. 

பெண் பணியாளர் குழாமொன்றைக் கொண்ட இலங்கை விமானமொன்று சிங்கப்பூருக்கு பயணம் மேறகொண்டது. 

சுவாமி விவேகானந்தரின் 125 ஆவது ஞாபகர்த்த நிகழ்வுகள் நடைபெற்றன.

ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் பங்குபற்ற 5 பேர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன (தூதுக்குழு தலைவர்), கலாநிதி சரத் அமுனுகம பா.உ, கலாநிதி சுரேன் ராகவன் வட மாகாண ஆளுநர்,  திரு. ரவிநாத் ஆரியசிங்க செயலாளர் – வெளிநாட்டுஅலுவல்கள் அமைச்சு, மற்றும் திரு.ஏ.நெரின் புள்ளேஇ பிரதி  சொலிஸிட்டர் ஜெனரல் ஆகியோரே இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.  (இலங்கைக்கான ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.ஏல்.ஏ. அஸீஸ் பிரதி வதிவிடப் பிரதிநிதி சமன்த ஜயசூரிய)

மாலபே--புறக்கோட்டைக்குமிடையிலான இலகு ரயில் சேவை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் ஜப்பான் அரசுடன் கைச்சாத்திடப்பட்டது. 
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க முன்னிலையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது.

ஐக்கிய நாடுகள் சபையின்  சர்வதேச சு;ற்றாடல் மாநாட்டின் நான்காவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கென்யாவின் நைரோபி நகருக்கு சென்றார்

மார்ச் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை திரிபீடகவாரம் கொண்டாடப்பட்டது. இது திரிபீடகவந்தனா எனப்படுகின்றது. 

பலஸ்தீனுக்கான இலங்கைத் தூதுவர் பௌஸான் அன்வர் அவர்களுக்கு நட்புறவின் நட்சத்திரம் என்ற விருது பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸினால் வழங்கப்பட்டது. பதவிக்காலம் முடிந்து நாடு திரும்புகின்ற தூதுவருக்கு இவ்விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ஐ.நா சபையால் வெளியிடப்பட்டது. இதில் 
இலங்கைக்கு 130 ஆவது இடம் கிடைத்தது. முதல் இடத்தில் பின்லாந்து உள்ளது. 

இலங்கையில் முதன் முறையாக செயற்கை மழை பெய்ய வைக்கப்பட்டது. மவுசாக்கலையில் இந்த மழை பெய்விக்கப்பட்டது.   இதற்கு தாய்லாந்தின் பொறியியலாளர் குழுவொன்று பயன்படுத்தப்பட்டது. இது தொடர்பாக நிதியமைச்சும் விமானப்படையும் உடன்படிக்கையொன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். 

பிரபல சிங்கள பாடகி அஞ்சலீன் குணதிலக தனது 79 ஆவது வயதில் காலமானார்.

1994 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட திருமதி காமினி திசாநாயக்க காலமானார். இவர் முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் மனைவியாவார்.


எல்தோனியாவின் பொதுத் தேர்தலில் காஜா கல்லஸ் தலைமையில் போட்டியிட்ட மைய வலதுசாரி சீர்திருத்தக் கட்சி  வெற்றி பெற்றது. இதன் மூலம் காஜா கல்லஸ் எல்தோனியாவின் முதல் பெண் பிரதமரானார். 

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தை தாக்கிய  சூறாவளியால் 23 பேர் கொல்லப்பட்டனர். 

இளம் வயதில் சம்பாதித்தவர் பட்டியலில் அமெரிக்க மொடலும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கைலி ஜென்னர் இடம்பிடித்தார்.

எதியோப்பியாவிலிருந்து கென்யாவின் நைரோபி நகருக்கு சென்ற போயிங் 737 MAX 8 விமானம் விபத்திற்குள்ளானது. இதில் பயணம் செய்த 149 பயணிகள் 08 பணியாளர்கள் மரணமடைந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தத்துடன் வெளியேறும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் தீர்மானத்தை  பிரித்தானிய பாராளுவமன்றம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடித்தது. 

நியுஸிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச் நகரிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் ஆயுததாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவ்ததில 57 பேர் கொல்லப்பட்டதுடன் 50 பேரளவில் காயமடைந்தனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான பப்புவாயில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 104 பேர் உயிரிழந்தனர். 

தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட இடாய் சூறாவளியினால்  சிம்பாபே, மொஸாம்பிக், மாலாவி போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டன. ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இறந்தனர். 3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.மொசாம்பிக்கின் பெய்ரா நகரத்தில் ஏற்பட்ட சூறாவளியில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ எட்டியது.

வாழ்வதற்கு அதிக செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் சிங்கப்பூர் , ஹொங்கொங், பாரிஸ் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்தன.

சிரியாவின் பாகூஸ் கிராமத்தில் இருந்த ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நிலப்பகுதியில் இருந்து அந்தக்குழு தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்காவுக்கு ஆதரவான சிரிய ஜனநாயகப் படை அறிவித்தது. 

உலகின் சிறந்த ஆசிரியராக கென்யாவைச் சேர்ந்த பீட்டர் டபிச்சி என்ற ஆசிரியர் தெரிவானார். வார்க்கி அறக்கட்டளையால் இந்த விருது வழங்கப்பட்டது.

ULA. Rasmy
Teacher
Ho/Galagedara Muslim Vidyalaya, Padukka
#ஜப்பான்_புதிய_யுகம்_அறிவிப்பு


ஜப்பானில் புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்துக்கான பெயர் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ரெய்வா’ என்று புது யுகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இரண்டு ஜப்பானிய எழுத்துகளைக் கொண்டு அமைந்திருக்கும் அந்தப் பெயர் ‘ஒழுங்கு’, “மங்களகரம்’, ‘அமைதி’, ‘நல்லிணக்கம்’ ஆகியவற்றைக் குறிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பேரரசர் அக்கிட்டோ, இம்மாத இறுதியில் அரியணை துறப்பதை அடுத்து, புதிய யுகத்திற்கான பெயர் அறிவிக்கப்பட்டது. 7ஆம் நூற்றாண்டிலிருந்து இதுவரை ஜப்பானில் சுமார் 250 யுகங்கள் நடப்பில் இருந்துள்ளன.

இம்மாத இறுதியில், கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த ‘ஹெய்சி’ யுகம் ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ‘ரெய்வா’ யுகம் அதிகாரபூர்வமாகத் ஆரம்பிக்கப்படும்.
உலக நாடுகளின் தலைநகரங்கள் 

1. ஆப்கானிஸ்தான் - காபுல்
2. அல்பேனியா - டிரேன்
3. அல்ஜீரியா - அல்ஜியர்ஸ்
4. அன்டோரா - அண்டோரா லா வெல்லா
5. அங்கோலா - லுவாண்டா
6. அன்டிகுவா மற்றும் பார்புடா - செயிண்ட் ஜான்ஸ்
7. அர்ஜென்டீனா - புவேனஸ் அயர்ஸ்
8. ஆர்மீனியா - யெரெவன்
9. ஆஸ்திரேலியா - கான்பெர்ரா
10. பஹ்ரைன் - மனாமா
11. வங்காளம் - டாக்கா
12. பார்படாஸ் - பிரிட்ஜ்டவுன்
13. பெல்ஜியம் - பிரஸ்ஸல்ஸ்
14. பெலிஸ் - பெல்மோபான்
15. பெனின் - போர்டோ-நோவோ
16. பூட்டான் - திம்பு
17. பொலிவியா - லா பாஸ்
18. போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா - சரசேவ்
19. போட்ஸ்வானா - கபோரோன்
20. பிரேசில் - பிரேசிலியா
21. புருனே - பந்தர் சீரி பேகவான்
22. பல்கேரியா - சோபியா
23. புர்கினா பாசோ - வாகடூகூ
24. பர்மா - ரங்கூன்
25. கனடா - ஒட்டாவா
26. கேப் வெர்டே - பிரியா
27. மத்திய ஆபிரிக்க குடியரசு - பாங்கி
28. சாத் - நிஜமேனா
29. சிலி - சாண்டியாகோ
30. சீனா - பெய்ஜிங்
31. கொலம்பியா - போகோடா
32. கொமோரோஸ் - மொரோனி
33. கோஸ்டா ரிக்கா - சான் ஜோஸ்
34. கோட் டி ஐவோயர் - யாஸ்ஸ்சுகுரோ
35. குரோஷியா - சாக்ரெப்
36. கியூபா - ஹவானா
37. சைப்ரஸ் - நிக்கோசியா
38. செக் குடியரசு - ப்ராக்
39. காங்கோ ஜனநாயகக் குடியரசு - கின்ஷாசா
40. டென்மார்க் - கோபன்ஹேகன்
41. ஜிபூட்டி - ஜிபூட்டி
42. டொமினிகா - ரோஸ்யூ
43. டொமினிக்கன் குடியரசு - சாண்டோ டோமிங்கோ
44. கிழக்கு திமோர் - டிலி
45. எக்குவடோர் - கியூடோ
46. எகிப்து - கெய்ரோ
47. எல் சால்வடோர் - சான் சல்வடோர்
48. எக்குவடோரியல் கினியா - மலாபோ
49. எரிட்ரியா - அஸ்மார
50. எஸ்டோனியா - தாலின்
51. எத்தியோப்பியா - அடிஸ் அபாபா
52. மைக்ரோனேஷியாவின் ஒருங்கிணைந்த நாடுகள் - பாலிகிர்
53. பிஜி - சுவா
54. பின்லாந்து - ஹெல்சிங்கி
55. பிரான்ஸ் - பாரிஸ்
56. காபோன் - லிப்ரெவில்
57. ஜோர்ஜியா - திபிலி
58. ஜெர்மனி - பெர்லின்
59. கினியா - கொனாக்ரி
60. இந்தியா - புது தில்லி
61. இந்தோனேசியா - ஜகார்த்தா
62. ஈரான் - தெஹ்ரான்
63. ஈராக் - பாக்தாத்
64. அயர்லாந்து - டப்ளின்
65. இஸ்ரேல் - ஜெருசலேம்
66. இத்தாலி - ரோம்
67. ஜமைக்கா - கிங்ஸ்டன்
68. ஜப்பான் - டோக்கியோ
69. ஜோர்டான் - அம்மன்
70. கஜகஸ்தான் - அஸ்தானா
71. கென்யா - நைரோபி
72. லிபியா - திரிப்போலி
73. லிச்சென்ஸ்டீன் - வடுஸ்
74. லித்துவேனியா - வில்னியஸ்
75. லக்சம்பர்க் - லக்சம்பர்க்
76. மாசிடோனியா - ஸ்கோப்ஜே
77. மடகாஸ்கர் - அண்டனானரீவோ
78. மலாவி - லிலொங்வே
79. மலேசியா - கோலாலம்பூர்
80. மாலத்தீவுகள் - ஆண்
81. மாலி - பமாகோ
82. மால்டா - வால்லெட்டா
83. மார்ஷல் தீவுகள் - மஜுரோ
84. மௌரிடானியா - நவக்ஷாட்
85. மொரிஷியஸ் - போர்ட் லூயிஸ்
86. மெக்ஸிக்கோ - மெக்ஸிகோ சிட்டி
87. மால்டோவா - சிசினு
88. மொனாக்கோ - மொனாக்கோ
89. மங்கோலியா - உலான்பாடர்
90. மொராக்கோ - ரபாத்
91. மொசாம்பிக் - மாபுடோ
92. நமீபியா - வின்ட்ஹோக்
93. நவ்ரு - யேரன் மாவட்டம்
94. நேபாளம் - காத்மாண்டு
95. நெதர்லாந்து - ஆம்ஸ்டர்டாம்
96. நியூசிலாந்து - வெலிங்டன்
97. நிகராகுவா - மனாகுவா
98. நைஜர் - நியாமி
99. நைஜீரியா - அபுஜா
100. வட கொரியா - பியோங்யாங்
101. நார்வே - ஒஸ்லோ
102. ஓமான் - மஸ்கட்
103. பாகிஸ்தான் - இஸ்லாமாபாத்
104. பலாவு - கோரோர்
105. பனாமா - பனாமா நகரம்
106. பப்புவா நியூ கினி - போர்ட் மோர்ஸ்பி
107. பராகுவே - அசன்சியன்
108. பெரு - லிமா
109. பிலிப்பைன்ஸ் - மணிலா
110. போலந்து - வார்சா
111. போர்ச்சுகல் - லிஸ்பன்
112. கத்தார் - தொஹ
113. காங்கோ குடியரசு - பிராசவில்லி
114. ருமேனியா - புக்கரெஸ்ட்
115. ரஷ்யா - மாஸ்கோ
116. ருவாண்டா - கிகாலி
117. செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - பாஸ்டெரேர்
118. செயிண்ட் லூசியா - காஸ்ட்ரீஸ்
119. செயிண்ட். வின்சென்ட் மற்றும் கிரெனேடின்ஸ் - கிங்ஸ்டவுன்
120. சமோவா - அப்பியா
121. சான் மரினோ - சான் மரினோ
122. சாவ் டோம் மற்றும் பிரின்சிபி - சாவ் டோம்
123. சவுதி அரேபியா - ரியாத்
124. செனகல் - தாகர்
125. செர்பியா மற்றும் மாண்டினீக்ரோ - பெல்கிரேடு
126. சீஷெல்ஸ் - விக்டோரியா
127. சியரா லியோன் - ஃப்ரீடவுன்
128. சிங்கப்பூர் - சிங்கப்பூர்
129. ஸ்லோவாகியா - பிராடிஸ்லாவா
130. ஸ்லோவேனியா - லுஜுபல்னா
131. சாலமன் தீவுகள் - ஹோனியாரா
132. சோமாலியா - மொகடிஷு
133. தென்னாப்பிரிக்கா - பிரிட்டோரியா
134. தென் கொரியா - சியோல்
135. ஸ்பெயின் - மாட்ரிட்
136. இலங்கை - கொழும்பு
137. சூடான் - கார்ட்டூம்
138. சூரினாம் - பராமரிபோ
139. சுவாசிலாந்து - Mbabana
140. ஸ்வீடன் - ஸ்டாக்ஹோம்
141. சுவிட்சர்லாந்து - பெர்ன்
142. சிரியா - டமாஸ்கஸ்
143. தைவான் - தைப்பி
144. தஜிகிஸ்தான் - துஷன்பே
145. தான்சானியா - தார் எஸ் சலாம்
146. தாய்லாந்து - பாங்காக்
147. பஹாமாஸ் - நசோ
148. தி காம்பியா - பன்ஜல்
149. டோகோ - லோம்
150. டோங்கா - நாகுல்லாஃபா
151. டிரினிடாட் மற்றும் டொபாகோ - போர்ட்-ஆஃப்-ஸ்பெயினில்
152. துனிசியா - துனிஸ்
153. துருக்கி - அங்காரா
154. துர்க்மேனிஸ்தான் - அஷ்பபாட்
155. துவாலு - ஃபுனூபுதி
156. உகாண்டா - கம்பாலா
157. உக்ரைன் - கீவ்
158. ஐக்கிய அரபு அமீரகம் - அபுதாபி
159. ஐக்கிய இராச்சியம் - லண்டன்
160. ஐக்கிய அமெரிக்கா - வாஷிங்டன் டி.சி.
161. உருகுவே - மான்டிவிடியோ
162. உஸ்பெகிஸ்தான் - தாஷ்கண்ட்
163. வனுவாட்டு - போர்ட்-விலா
164. வத்திக்கான் நகரம் - வத்திக்கான் நகரம்
165. வெனிசுலா - கராகஸ்
166. வியட்நாம் - ஹனோய்
167. ஏமன் - சனா
168. சாம்பியா - லுஸாகா
169. ஜிம்பாப்வே - ஹாரேர்

      
மாயா பஜார்

மக்கள் தொகை குறைவான தேசங்கள்
   

Published : 09 Jul 2014  15:11 IST
Updated : 09 Jul 2014  15:11 IST
உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடு எது? சீனா என்று சொல்லிவிடுவீர்கள். அதற்கு அடுத்த இடம் நம் நாட்டுக்குத்தான். எப்போதும் மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளை பற்றிதான் பேசுகிறோம். மக்கள் தொகை குறைவாக உள்ள உலகில் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகள் நிறைய உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

 மக்கள்தொகை குறைவாக உள்ள நாடுகளில் முதலிடம் வாட்டிகன். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகம் அமைந்துள்ள இங்கு மொத்தமே 839 (2013-ம் ஆண்டு நிலவரம்) பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் அனைவரும் மதகுருமார்கள்.

 தென் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள நவ்ரு குடியரசுக்கு இரண்டாவது இடம். இங்கு 2011-ம் ஆண்டு நிலவரப்படி 9,378 பேர் உள்ளனர்.

 மூன்றாவது இடம், பசிபிக் கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள துவாளு. இது ஒரு தீவு நாடு. இங்கு 2013-ம் ஆண்டு நிலவரப்படி 10,441 பேர் உள்ளனர்.

 பசிபிக் பகுதியில் உள்ள பாலாவ் தீவு நாட்டுக்கு நான்காவது இடம். இங்கு 2011-ம் ஆண்டு நிலவரப்படி 20,956 பேர் வசிக்கின்றனர்.

 ஐரோப்பா கண்டத்தில் இத்தாலியையொட்டி மலைகள் சூழ்ந்த பகுதி சான் மரினோ குடியரசு. இங்கு 2012-ம் ஆண்டு நிலவரப்படி 32,576 பேர் வாழ்ந்து வருகிறார்கள். உலக அளவில் இந்த நாட்டுக்கு 5வது இடம்.

 ஐரோப்பா கண்டத்தில் பிரான்ஸ் அருகே உள்ள மொனாக்கோவுக்கு ஆறாவது இடம். இங்கு 2011ம் ஆண்டு நிலவரப்படி 36,371 பேர் உள்ளனர்.

For principal service and sleas
1) இல்ங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது?
    : மத்துகம

2)மத்திய மகாவித்தியாலயங்கள் எத்தனை?
      54

3) இலங்கை ஆசிரியசேவையில் தற்போதுள்ள தரங்கள்
        தரம் 3-11,3-1(அ),3-1(ஆ), 3-1(இ),2-11,2-1,1

4)இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள் எத்தனை?
        19

5) முதலாவதாக அமைக்கப்பட்ட  தேசிய கல்வியியற் கல்லூரி எது?
      மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி

6) சுதந்திர. இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர் யார்?
        ஈ.ஏ.நுகாவெல

7)இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் நடைமுறை எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?
        2015

8) கட்டாய கல்வி  வயதெல்லை யாது? 
          5-16 வயது (20/4/2016)

9)"' மகாபொல'" புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர் யார்?
          லலித் அத்துலக் முதலி

10) "கல்வியின் புதியபாதை" எப்போது வெளியிடப்பட்டது?
          1972
11) தேசிய பாடசாலைகள் எப்போது உருவாக்கப்பட்டது?
           1987

12)இலங்கையில் தற்போது எத்தனை தேசியபாடசாலைகள் உள்ளன?
            353

13)இலங்கையிலுள்ள கல்வி வலயங்கள் எத்தனை?
          99 (ஆதாரம் 2017 G.C.E O/L பரீட்சை திணைக்கள அறிக்கை)

14)தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை?
             8

15)தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு எது?
          தேசிய கல்வி ஆணைக்குழு

16) கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் பங்காற்றும் அமைப்பு
          தேசிய கல்வி நிறுவகம்

17)இலங்கையில் கல்விப்பீடமுள்ள பல்கலைக்கழங்கள் எவை?
             கொழும்பு பல்கலைக்கழகம்,திறந்த. பல்கலைக்கழகம்

18) யுனெஸ்கோவின் 4தூண்களும் எவை? 
 அறிவதற்காககற்றல்,       செயலாற்றுவதற்காக கற்றல்,    வாழக்கற்றல்,
 இணைந்து வாழக்கற்றல்

19) பரிஸ் பாடசாலைகள் யாரால்      ஆரம்பிக்கப்பட்டது?
          போர்த்துக்கேயரால்

20)ஆங்கில பாடத்துக்கென ஆரம்பிக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது?
    பேராதனிய தேசிய கல்வியியற்   கல்லூரி,பெனிதெனிய

21)அடிப்படை கற்றல் தேர்ச்சிகள் எவை?
 @ சூழல் தொடர்பான தேர்ச்சி
 @தொடர்பாடல் தேர்ச்சி
 @சமயமும் ஒழுகலாறும்
 @விளையாட்டும் ஓய்வுநேர பயன்பாடும்
 @கற்கக் கற்றல் 
 @வேலையுலகிற்கு தயார் செய்தல்
 @ஆளுமை தொடர்பான தேர்ச்சி

22) இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் எத்தனை?
       15

23)c.w.w கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கல்வித்திட்டத்தின் பெயரென்ன?
         ஹெந்தஸ(1932)

24)முன்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அமைப்பு எது?
          உள்ளூராட்சி மன்றங்கள்

25)பொது போதனா திணைக்களம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
         1869

26) கல்வியியற் கல்லூரி ஆண்டு எப்போது?.  
    2015

27)குடியரசு,சட்டம் ஆகிய நூல்களை எழுதிய கல்வி சிந்தனையாளர்?
         பிளேட்டோ

28)"கல்வியும் தத்துவமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களை போன்றன" என்று கூறியவர்?
            W.றோஸ்

29)அரசியல் என்ற நூலை எழுதியவர்?
              அரிஸ்ரோட்டில்

30)அனுபவங்களை அனுபவங்களுடாக அனுபவங்களாகவே பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியவர்?
                ஜோன் டூயி

31)கட்டாய கல்வி சட்டமூலமாக்கப்பட்டது எப்போது?
             1997(1003/05)

32)உட்ப்படுத்தல் கல்வியாண்டு எப்போது?
             2012

33) "எமிலி" எழுதியவர்?
               ரூசோ

34) உளப்பகுப்பு கொள்கை?
                 சிக்மண்ட் புரொய்ட்

35)மகாத்மா காந்தியின் 3H எவை?
             கை,தலை,இதயம்

36)3 Tயினால் தரப்படும் ஆசிரிய வகிபாகங்கள்?
          கடத்தல்,பரிமாற்றல்,நிலைமாற்றல்

37)தற்போது அமுலிலுள்ள கல்வி கட்டளைச்சட்டம்
             1939, 31ம் இலக்க கல்வி கட்டளைச்சட்டம்

38)திறந்த பல்கலைக்கழகம் எப்போது அமைக்கப்பட்டது?
              1980

39)சுயமொழிப்போதனை எப்போது 
          1956

40) இலங்கையிலுள்ள அரசபாடசாலைகள்(2017டிசம்பர்) எத்தனை?
                10194

41)தற்போதைய தரவுகளின்படி(2017) அரச பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர் விகிதம்
               1:17

42) தொழினுட்பதுறைக்கான கல்வியியற் கல்லூரி எங்கே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது?
           குளியாப்பிட்டிய

43)நாடாளவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்க்கொள்ளப்பட்ட செயற்றிட்டம்
              திடசங்கல்பம்

 44) முதலாவது திறன்வகுப்பறை (Smart class room) எங்கு அமைக்கப்பட்டது?
                 ஜயவர்த்தனபுர(ஆண்கள்) மகாவித்தியாலயம்

(Sivapathasundrampillai Navaneethan)

45) வணிகக்கல்விக்கான கல்வியியற் கல்லூரி எங்குள்ளது?
             மகரகம

46) தேசிய கல்விக்குறிக்கோள்களில் முதலாவதாக வலியுறுத்தப்படுவது?
                    தேசிய ஒருமைப்பாடு

47)யுனெஸ்கோவின் நான்கு தூண்களில் உலகளாவியரீதியில் தற்போது பிரதானப்படுத்தப்படுத்தப்படுவது?
                  இணைந்துவாழக்கற்றல்

48)கல்வியுடன் தொடர்புடைய சேவைகள் எவை?
            கல்விநிர்வாக சேவை(SLEAS),   
             கல்வியியலாளர் சேவை(SLTES)
             அதிபர் சேவை(SLPS)
             ஆசிரிய சேவை(SLTS)

49) க.பொ.த(உ/த) தொழினுட்ப பாடத்துறைக்குரிய பாடங்கள் எவை?
     #பொறியியற் தொழினுட்பம்/   உயிர்முறையியற் தொழினுட்பம்
    #தொழினுட்பத்துக்கான விஞ்ஞானம்
      #கணிதம் ,வரலாறு,புவியியல்,I.T, போன்ற

50) இலங்கையில் அண்மையில் எதிர்ப்புக்குள்ளாகும் தனியார் மருத்துவ பல்கலைக்கழத்தின் பெயர் யாது?
          சைட்டம்

51) தேசிய பாடசாலையின் நேரடி நிர்வாக நடைமுறையை கட்டுப்படுத்துவது?
              நிரல் கல்வியமைச்சு

52) 1995 ஆசிரியர் பிரமாணக்குறிப்பின்படி ஆசிரியர் தரங்கள் 
            3-ii, 3-i ,2-ii, 2-i ,1

53)க.பொ.த(உ/த)தொழினுட்ப பிரிவின் இரண்டு துறைகளும் எவை?
                  எந்திரவியல் தொழினுட்பம்,  உயிர்முறையியல் தொழினுட்பம்

54)க.பொ.த (சா/த) பாடசாலை பரீட்சார்த்தியொருவர் தோற்றக்கூடிய ஆகக்கூடிய பாடங்களின் எண்ணிக்கை 
            9 

55)க.பொ.த (சா/த) மையப்பாடங்கள் எவை?
மொழி,கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு,     சமயம்,ஆங்கிலம்

56)இலவசக்கல்வி சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
                1944

57)ஆசிரியர் சுயமதிப்பீட்டை ஊக்குவிக்க.   2016 முதல் அமுற்ப்படுத்தப்படுவது? 
  ஆசிரியர் அறிக்கை புத்தகம்

58) ஆசிரியர் ஒழுக்ககோவை கொண்டுவரப்பட்ட ஆண்டு?
               2012(உறுதிப்படுத்தவும்)

59)அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை வலுப்படுத்த தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட துறை எது?
      13 வருட உத்தரவாத கல்வி
          
60) இலவச கல்வியை மேம்படுத்த இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து கல்வியமைச்சு வழங்கும் காப்புறுதி
        சுரக்க்ஷ
அழிந்துவரும் வன விலங்குகளை காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 03ம் திகதி உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2013 டிசம்பர் 20ம் திகதி நடைபெற்ற 68வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் அரிய வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களை பாதுகாத்தல் தொடர்பான சர்வதேச சாசனம் Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தினமான மார்ச் 03 (1973) 'உலக வனவிலங்கு' தினமாக ஐ.நா அறிவித்தது. இந்த தினத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொனிப் பொருளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டு, நீருக்கு கீழுள்ள வாழ்க்கை.மக்களுக்கும் புவிக்கும்' ( “Life below water: for people and planet"),எனும் தொனிப்பொருளில் 'உலக வனவிலங்கு' தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
. அரிய வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களை பாதுகாத்தல் தொடர்பான சர்வதேச சாசனம் Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) 1973.03.03 திகதி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் தற்போது 183 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன.( 182 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்)

ஐக்கிய நாடுகள் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் 14 ஆவது இலக்கான “நீருக்கு கீழுள்ள வாழ்க்கை” என்பதனை இலக்காக கொண்டே அவ்வாண்டின் தொனிப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புவியின் சுமார் 70 வீதமான பகுதி கடலினால் சூழப்பட்டுள்ளது. கடலாகது பல பெறுமதிமிக்க உயிரனங்களையும் வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கடல் வாழ் உயிரினங்களாக இதுவரை சுமார் 2 லட்சம் உயிரினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆயினும் இத்தொகை மில்லியனை தாண்டக்கூடியது. உலகில் சுமார் 3 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கடலை ஆதாரமாக கொண்ட வாழ்கையே வாழ்கின்றனர்.

ஆனால் இன்று மனித செயற்பாட்டின் க◌ாரணமாக அதிகளவு மாசுபடும் இடமாக கடல் உள்ளதனால் காலப்போக்கில் அதன் இயற்கை சமனிலையில் பாரிய தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஒட்டுமொத்த புவியின் சமநிலையினையும் பாதிக்கும் ஒரு செயற்பாடாகலாம்.
#குத்துச்சண்டை_உலகின்_முடிசூடா_மன்னன்_முஹம்மத்_அலி

1942 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி அமெரிக்காவின் லுயிவில் கெனடாக்கியில் கிலேய் என்ற ஒரு கருப்பினக் குடும்பத்தில் பிறந்தார். அபபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் Cassius Marcellus Clay.தனது பன்னிரண்டாம் வயதில் குத்துச்சண்டைப் பயிற்சிகளைப் பெற்ற அவர் 1960 ஆண்டு தனது 

பதினெட்டு வயதில் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட தங்கபதக்கம் வென்றார். 1964ம் ஆண்டு கருப்பின விடுதலைக்காக போராடும் அலிஜா முஹம்மதின் முஸ்லிம் தேசியம் இயக்கத்தில் இனைந்து தனது பெயரை முஹம்மத் அலி என மாற்றிக்கொண்டார்.
1965ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் திகதி குத்துச் சண்டை உலகில் அதிசயம் நிகழ்ந்தது சோனி லிஸ்டன் என்ற உலக குத்துச்சண்டை வீரரை வீழ்த்தி "உலக ஹெவி வெய்ட்" (World Heavyweight Champion) குத்துச் சண்டை விருதை முதன் முதலாக வென்றெடுத்தார். 1964 முதல் 1967 வரை "உலக ஹெவி வெய்ட்" குத்துச் சண்டை வீரராக திகழ்ந்த அலி. 1966ம் ஆண்டு அமெரிக்கா இராணுவத்தில் கட்டாயச் சேவை புரிய மறுத்ததால் கைதுசெய்யப்பட்டு அவரது பட்டங்கள் மற்றும் குத்துச்சண்டை அனுமதிப்பத்திரம் பறிக்கப்பட்டது. எனினும் 1970ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அமைவாக அவரது பட்டம் மற்றும் உலக குத்துச்சண்டை அனுமதிப்பத்திரம் மீண்டும் வழங்கப்பட்டது.

1971ம் ஆண்டு ஜோய் பிரேஸிர்யுடன் மோதி தோல்வியைத் தழுவினார்.
மனம் தளராத முஹமத் அலி.1974ஆம் ஆண்டு மீண்டும் ஜோய்  பிரேஸியருடன் மோதி அவரை வீழ்த்தி உலக விருதை மீண்டும் இரண்டாவது முறையாக வென்றார். பின்னர் லியொன் ஸ்பிங்ஸுடன் மோதி தோல்வியைத் தழுவினார்.1978ஆம் ஆண்டு லியொன் ஸ்பிங்ஸுடன் மோதி மூன்றாவது முறையாக உலக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.ரிங் சஞ்சிகையால் அவருக்கு 'The Greatest' என்ற பட்டம் சூட்டப்பட்டது. 61 குத்துச் சண்டை போட்டியில் களமிறங்கி அதில் 37நொக்கவுட் வெற்றி உள்ளடங்களாக 56 போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்தே ஐந்து தோல்விகளைதான் தழுவியுள்ளர்.ஓரே ஒரு முறை நொக்கவுட் தோல்வியை சந்தித்த முஹம்மத் அலி பார்கின்ஸனஸ் நோயினால் தாக்கப்பட்டு 2016ம் ஆண்டு தனது 74வது வயதில்  நொக்கவுட் முறையில் மரணத்தால் வெற்றிகொள்ளப்பட்டார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.
Happier Together,
ஐக்கிய நாடுகள் சபையின் 12 யூலை 2012 ம் திகதிய பிரகடனத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் திகதி “ சர்வதேச மகிழ்ச்சி தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டு 2013 மார்ச் 20 திகதி முதல் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்படும் இத்தினத்தின் இவ்வாண்டிற்கான தொனிப்பொருள் ‘மகிழ்ச்சியாக  ஒன்றாய் இருத்தல்”(Happier Together,) என்பதாகும்.
“எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்” — பெனோ செபீன்
 மகிழ்ச்சி என்ற சொல் சிறியதாக இருந்தாலும் இதற்கான தெளிவான வரைவிலக்கணம் இதுவரை அறியப்படவில்லை. மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் என்னென்ன இருக்க வேண்டும் என்ற ஒரு நீண்ட பட்டியலே நம்மிடம் உண்டு. பொதுவாகவே பணம் இருந்தால் அனைத்துப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் உலக வரலாற்றில் பணம் படைத்த பலருக்கு அந்த வாழ்வு மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரியவில்லை. 
நல்ல நிரந்தரமான வேலை, அந்த வேலையில் தேவையான வருமானப் படி உயர்வு, தேர்வில் வெற்றி பெறுதல், புது வீடு வாங்குதல் , புதிய வாகனம் வாங்குதல் , புதிய ஆடை அணிகலன்கள் வாங்கி உடுத்துதல் ஆகியவற்றை முயன்று அடைந்தாலும் கொஞ்ச நாட்களுக்குத்தான் அந்த மகிழ்ச்சி நிலைக்கும். பிறகு முன்னிருந்த அதே மனநிலைக்கு மனம் சென்றுவிடும். கிடைத்தவை மகிழ்ச்சி அளித்துக் கொண்டே இருக்காது. சிறிது நாட்களில் வேறு ஒன்றைத் தேடி எமத மனம் அலையத் தொடங்கும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனமகிழ்ச்சி என்பதற்கு இறுதி இலக்கு இல்லை. அது நகர்ந்து கொண்டே இருக்கும் அடையமுடியாத ஓர் இலக்கு. இதோ அடைந்துவிட்டோம் என்று நினைத்த சிறிது நாட்களில் அது நிறைவு தராத நிலையை நமக்குக் கொடுத்துவிட, மேலும் மகிழ்ச்சியைத் தேடி நம் பயணம் தொடர ஆரம்பிக்கும். கானல் நீர் போன்ற மகிழ்சியைத் தேடித் தேடி மனம் ஓடிக்கொண்டே இருக்கும். நமது முயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அப்படியானால் இந்த மகிழ்ச்சியை அடைவதுதான் எப்படி? இதைப் பற்றி அறிவியல் ஆராய்ச்சி கூறுவது என்ன? தினசரி வாழ்க்கையில் நாம் நல்ல மனநிலையில் இருப்பதும், அத்துடன் எந்த அளவு மன நிறைவுடன் இருக்கிறோம் என்ற இவ்விரு நிலைகளின் ஒரு கலவையே மகிழ்ச்சி என்கிறது அறிவியல் ஆய்வுகள்.

 “ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதாகக் கொண்டிருக்கும் நிறைவான மனநிலையும், அமைதியான மனமும் பெரும்பாலும் மாறாத வகையில் நிலைத்த மகிழ்ச்சியைத் தர வல்லது” என்கிறார்,பென்சில்வேனியா பல்கலைக் கழக பேராசிரியர் ‘அக்கேசியா பார்க்ஸ்’ (Acacia Parks).

2018     ம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையின் படி   (World Happiness Report 2018) உலகில் மகிழ்ச்சியான நாடாக  முதலிடத்தில் பின்லாந்து நாடும் தொடர்ந்து நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிர்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன.
#உலகில்10வது_வருடத்தில்_மிக உயிர்வாழக்கூடிய #நகரங்களின்_மெர்கஸின்_குறியீட்டு_வரிசையில் #முதலிடம்_வகிப்பது_ஆஸ்திரியாவின்_தலைநகரம்_வியன்னா_நகரம் 

ஆஸ்திரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இங்கு 1.8 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இது ஆஸ்திரியாவின் மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பங்காகும். மேற்கத்திய இசை பண்பாட்டுக் கருவூலமாக இந்நகரம் விளங்குவது மட்டும் அன்றி, கல்வி, தொழிநுட்பம், பொருள்முதல் மையமாகவும் விளங்குகிறது.
அந்தவகையில் 
ஆஸ்திரிய தலைநகர் #வியன்னா 10 வது வருடத்தில் மிக உயிர்வாழக்கூடிய நகரங்களின் மெர்கஸின் குறியீட்டு வரிசையில் முதலிடம் வகிக்கிறது. சுவிட்சர்லாந்தில் #சூரிச், குறியீட்டில் இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் #ஆக்லாந்து, #மியூனிச் மற்றும் #வான்கூவர் கூட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்தது.  தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை 105 வது இடத்தில் மெர்ஸரின் தர வாழ்க்கை குறியீட்டு எண் மற்றும் இந்தியாவில் இருந்து முதலிடம் வகிக்கிறது. லக்சம்பர்க் ஒரு தனியான பாதுகாப்புப் பாதுகாப்புக் குழுவில் பாதுகாப்பான நகரமாக அறிவிக்கப்பட்டது. உலகளாவிய ஆலோசனை நிறுவனமான #மெர்சர் உலகெங்கிலும் உள்ள 231 நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு, சுகாதார, கல்வி, பொது சேவைகள், பொழுதுபோக்கு, குற்றம், வீடுகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. தரவரிசை செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டிலிருந்து பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்திருந்தது.
முதன் முதலாய்

✍முதன் முதல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு- நியூசிலாந்து

✍பாராசூட்டில்இருந்துகுதித்த முதல்மனிதன் யார்?         1783  – லூயிஸ்–செபாஸ்டியன் லேனோர்மண்ட 
               ( Louis-Sébastien Lenormand )

✍தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
  ஜானகி ராமச்சந்திரன்

✍உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?
              பாபிலோன்

✍உலகின் முதல் பெண் பிரதமர்?
      திருமதி ஸ்ரீமாவோபண்டாரநாயஹ

✍1966ல்,  ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?
           எம். எஸ். சுப்புலட்சுமி

✍முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?
          வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.

✍காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
                                    பிரிட்டன்.

✍இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
ஜீ.வீ.மாவ்லங்கர்.

✍கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்

✍பாராளுமன்றம் முதலில் தோன்றிய நாடு?
ஐஸ்லாந்து

✍விமானத் தபால்தலைகள் வெளியிட்ட முதல்நாடு எது?
     பாரதம் 1929.

✍இந்தியாவின் முதல் பெண் மிருதங்க வித்வான் யார் ? ரங்கநாயகி

✍இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ? அஞ்சலி.

✍காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?   சீனா

✍விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
     இத்தாலி

✍ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?
    COUPLES RETREAT

✍இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் யார்?
   ஐசென் ஹோவர்

✍இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்?
   டாக்டர். வேணுகோபால்

✍தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?
   காளிதாஸ்

✍ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது?
1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது

✍முதன் முதல் தபால்தலை வெளியிட்ட நாடு?
இங்கிலாந்து

✍சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?
  டாக்கா

✍முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது?
கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா

✍தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?
நெல்சன் மண்டேலா

✍முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்?
    பெனாசீர் புட்டோ

✍தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது?
  மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)

✍இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
   டாக்டர்.ராஜேந்திர பிரசாத்

✍உலகில்  முதலில் கண்வங்கி தொடங்கிய நாடு- 
     அமெரிக்கா

✍முதன்முதலாக கார்ட்டூன் படங்களை பத்திரிகையில் வெளியிட்ட நாடு-
       இத்தாலி

✍உலகை முதன்முதலாக சுற்றி வந்த கப்பல்- 
   விக்டோரியா

✍பாரத ரத்னா  விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி

 நன்றி         
By:- M.Varunabalan
பாடசாலை கல்வி
1945- இலவச கல்வி ஆரம்பிக்கபட்டது.
1952- புலமை பரீசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
1956- சுய மொழிகள் போதனா மொழியாக்கப்பட்து.
1960- பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டது்
1980- இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டது.
1993- இலவச  சீறுடை வினியோகம்
2001- பாடசாலை கல்வி அமைச்சு உருவாக்கப்பட்டது.

உயர்கல்வி
1893- முதலாவது தொழிநுட்ப கல்லூரி
1921- லண்டன் பல்கலைகழக கல்லூரியுடன் இணைந்த வகையில் இலங்கை பல்கலைகழக கல்லூரி உருவாக்கப்பட்டது.
1942- இலங்கை பல்கலைகழக கல்லூரியையும், கொழும்பு மருத்துவ கல்லூரியும் இணைத்து இலங்கை பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
1978- இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.
1980- இலங்கையில் திறந்த பல்கலைகழகம் உருவாக்கப்பட்டது.
1981-மகாபொல புலமை பரீசில் திட்டம் உருவாக்கப்பட்டது.

பொதுவான தகவல்கள
கட்டாய கல்வி வயதெல்லை- 5-16
கல்வி வலையங்கள்- 98
இலங்கை ஆசிரியர் சேவை ஆரம்பிக்கப்பட்டது- 1994
கல்வியலுக்காக தனிபீடம் இருக்கும் பல்கலைகழகம்- கொழும்பு

சார்க் வலைய நாடுகளில் கல்விக்காக அதிகம் நிதி ஒதுக்கும் நாடு- இலங்கை

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...