Thursday, April 25, 2019

Happier Together,
ஐக்கிய நாடுகள் சபையின் 12 யூலை 2012 ம் திகதிய பிரகடனத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் திகதி “ சர்வதேச மகிழ்ச்சி தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டு 2013 மார்ச் 20 திகதி முதல் அனுஸ்டிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொனிப்பொருளில் அனுஸ்டிக்கப்படும் இத்தினத்தின் இவ்வாண்டிற்கான தொனிப்பொருள் ‘மகிழ்ச்சியாக  ஒன்றாய் இருத்தல்”(Happier Together,) என்பதாகும்.
“எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்” — பெனோ செபீன்
 மகிழ்ச்சி என்ற சொல் சிறியதாக இருந்தாலும் இதற்கான தெளிவான வரைவிலக்கணம் இதுவரை அறியப்படவில்லை. மனித வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பது. ஆதிகாலம் தொட்டு மனிதர்கள் தேடி அலைவது ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையைத்தான். மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் என்னென்ன இருக்க வேண்டும் என்ற ஒரு நீண்ட பட்டியலே நம்மிடம் உண்டு. பொதுவாகவே பணம் இருந்தால் அனைத்துப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் உலக வரலாற்றில் பணம் படைத்த பலருக்கு அந்த வாழ்வு மகிழ்ச்சியை அளித்ததாகத் தெரியவில்லை. 
நல்ல நிரந்தரமான வேலை, அந்த வேலையில் தேவையான வருமானப் படி உயர்வு, தேர்வில் வெற்றி பெறுதல், புது வீடு வாங்குதல் , புதிய வாகனம் வாங்குதல் , புதிய ஆடை அணிகலன்கள் வாங்கி உடுத்துதல் ஆகியவற்றை முயன்று அடைந்தாலும் கொஞ்ச நாட்களுக்குத்தான் அந்த மகிழ்ச்சி நிலைக்கும். பிறகு முன்னிருந்த அதே மனநிலைக்கு மனம் சென்றுவிடும். கிடைத்தவை மகிழ்ச்சி அளித்துக் கொண்டே இருக்காது. சிறிது நாட்களில் வேறு ஒன்றைத் தேடி எமத மனம் அலையத் தொடங்கும்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனமகிழ்ச்சி என்பதற்கு இறுதி இலக்கு இல்லை. அது நகர்ந்து கொண்டே இருக்கும் அடையமுடியாத ஓர் இலக்கு. இதோ அடைந்துவிட்டோம் என்று நினைத்த சிறிது நாட்களில் அது நிறைவு தராத நிலையை நமக்குக் கொடுத்துவிட, மேலும் மகிழ்ச்சியைத் தேடி நம் பயணம் தொடர ஆரம்பிக்கும். கானல் நீர் போன்ற மகிழ்சியைத் தேடித் தேடி மனம் ஓடிக்கொண்டே இருக்கும். நமது முயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அப்படியானால் இந்த மகிழ்ச்சியை அடைவதுதான் எப்படி? இதைப் பற்றி அறிவியல் ஆராய்ச்சி கூறுவது என்ன? தினசரி வாழ்க்கையில் நாம் நல்ல மனநிலையில் இருப்பதும், அத்துடன் எந்த அளவு மன நிறைவுடன் இருக்கிறோம் என்ற இவ்விரு நிலைகளின் ஒரு கலவையே மகிழ்ச்சி என்கிறது அறிவியல் ஆய்வுகள்.

 “ஓர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதாகக் கொண்டிருக்கும் நிறைவான மனநிலையும், அமைதியான மனமும் பெரும்பாலும் மாறாத வகையில் நிலைத்த மகிழ்ச்சியைத் தர வல்லது” என்கிறார்,பென்சில்வேனியா பல்கலைக் கழக பேராசிரியர் ‘அக்கேசியா பார்க்ஸ்’ (Acacia Parks).

2018     ம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையின் படி   (World Happiness Report 2018) உலகில் மகிழ்ச்சியான நாடாக  முதலிடத்தில் பின்லாந்து நாடும் தொடர்ந்து நோர்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிர்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன.

No comments:

Post a Comment

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...