Friday, April 26, 2019

உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன[4] :பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (MIGA), பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID)

உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.

தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியத்தையும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் "பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்" என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இந்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று.

No comments:

Post a Comment

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...