Thursday, April 25, 2019

அழிந்துவரும் வன விலங்குகளை காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 03ம் திகதி உலக வன விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

2013 டிசம்பர் 20ம் திகதி நடைபெற்ற 68வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் அரிய வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களை பாதுகாத்தல் தொடர்பான சர்வதேச சாசனம் Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தினமான மார்ச் 03 (1973) 'உலக வனவிலங்கு' தினமாக ஐ.நா அறிவித்தது. இந்த தினத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொனிப் பொருளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டு, நீருக்கு கீழுள்ள வாழ்க்கை.மக்களுக்கும் புவிக்கும்' ( “Life below water: for people and planet"),எனும் தொனிப்பொருளில் 'உலக வனவிலங்கு' தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
. அரிய வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களை பாதுகாத்தல் தொடர்பான சர்வதேச சாசனம் Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora (CITES) 1973.03.03 திகதி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் தற்போது 183 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன.( 182 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்)

ஐக்கிய நாடுகள் சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் 14 ஆவது இலக்கான “நீருக்கு கீழுள்ள வாழ்க்கை” என்பதனை இலக்காக கொண்டே அவ்வாண்டின் தொனிப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புவியின் சுமார் 70 வீதமான பகுதி கடலினால் சூழப்பட்டுள்ளது. கடலாகது பல பெறுமதிமிக்க உயிரனங்களையும் வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கடல் வாழ் உயிரினங்களாக இதுவரை சுமார் 2 லட்சம் உயிரினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆயினும் இத்தொகை மில்லியனை தாண்டக்கூடியது. உலகில் சுமார் 3 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கடலை ஆதாரமாக கொண்ட வாழ்கையே வாழ்கின்றனர்.

ஆனால் இன்று மனித செயற்பாட்டின் க◌ாரணமாக அதிகளவு மாசுபடும் இடமாக கடல் உள்ளதனால் காலப்போக்கில் அதன் இயற்கை சமனிலையில் பாரிய தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஒட்டுமொத்த புவியின் சமநிலையினையும் பாதிக்கும் ஒரு செயற்பாடாகலாம்.

No comments:

Post a Comment

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...