Thursday, April 25, 2019

#குத்துச்சண்டை_உலகின்_முடிசூடா_மன்னன்_முஹம்மத்_அலி

1942 ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி அமெரிக்காவின் லுயிவில் கெனடாக்கியில் கிலேய் என்ற ஒரு கருப்பினக் குடும்பத்தில் பிறந்தார். அபபோது அவருக்கு சூட்டப்பட்ட பெயர் Cassius Marcellus Clay.தனது பன்னிரண்டாம் வயதில் குத்துச்சண்டைப் பயிற்சிகளைப் பெற்ற அவர் 1960 ஆண்டு தனது 

பதினெட்டு வயதில் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட தங்கபதக்கம் வென்றார். 1964ம் ஆண்டு கருப்பின விடுதலைக்காக போராடும் அலிஜா முஹம்மதின் முஸ்லிம் தேசியம் இயக்கத்தில் இனைந்து தனது பெயரை முஹம்மத் அலி என மாற்றிக்கொண்டார்.
1965ஆம் ஆண்டு பிப்ரவரி 25ஆம் திகதி குத்துச் சண்டை உலகில் அதிசயம் நிகழ்ந்தது சோனி லிஸ்டன் என்ற உலக குத்துச்சண்டை வீரரை வீழ்த்தி "உலக ஹெவி வெய்ட்" (World Heavyweight Champion) குத்துச் சண்டை விருதை முதன் முதலாக வென்றெடுத்தார். 1964 முதல் 1967 வரை "உலக ஹெவி வெய்ட்" குத்துச் சண்டை வீரராக திகழ்ந்த அலி. 1966ம் ஆண்டு அமெரிக்கா இராணுவத்தில் கட்டாயச் சேவை புரிய மறுத்ததால் கைதுசெய்யப்பட்டு அவரது பட்டங்கள் மற்றும் குத்துச்சண்டை அனுமதிப்பத்திரம் பறிக்கப்பட்டது. எனினும் 1970ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அமைவாக அவரது பட்டம் மற்றும் உலக குத்துச்சண்டை அனுமதிப்பத்திரம் மீண்டும் வழங்கப்பட்டது.

1971ம் ஆண்டு ஜோய் பிரேஸிர்யுடன் மோதி தோல்வியைத் தழுவினார்.
மனம் தளராத முஹமத் அலி.1974ஆம் ஆண்டு மீண்டும் ஜோய்  பிரேஸியருடன் மோதி அவரை வீழ்த்தி உலக விருதை மீண்டும் இரண்டாவது முறையாக வென்றார். பின்னர் லியொன் ஸ்பிங்ஸுடன் மோதி தோல்வியைத் தழுவினார்.1978ஆம் ஆண்டு லியொன் ஸ்பிங்ஸுடன் மோதி மூன்றாவது முறையாக உலக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.ரிங் சஞ்சிகையால் அவருக்கு 'The Greatest' என்ற பட்டம் சூட்டப்பட்டது. 61 குத்துச் சண்டை போட்டியில் களமிறங்கி அதில் 37நொக்கவுட் வெற்றி உள்ளடங்களாக 56 போட்டிகளில் வெற்றி பெற்று ஐந்தே ஐந்து தோல்விகளைதான் தழுவியுள்ளர்.ஓரே ஒரு முறை நொக்கவுட் தோல்வியை சந்தித்த முஹம்மத் அலி பார்கின்ஸனஸ் நோயினால் தாக்கப்பட்டு 2016ம் ஆண்டு தனது 74வது வயதில்  நொக்கவுட் முறையில் மரணத்தால் வெற்றிகொள்ளப்பட்டார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

No comments:

Post a Comment

 #உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...