ஜூன் மாத உலக நிகழ்வுகள்
இலங்கை நிகழ்வுகள்
• பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 97 வாக்குகளைப் பெற்ற ஆனந்த குமாரசிறி சபாநாயகராக பதவியேற்றார். இவர் இலங்கையின் 29 ஆவது பிரதி சபாநாயகர் என்பது குறிப்பிடத்தக்கது.
• சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வு கேகாலையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. ‘பிளாஸ்டிக் பாவணையால் ஏற்படும் சுற்றாடல் மாசடைவைத் தடுப்போம்’ என்ற தொனிப் பொருளில் இது நடைபெற்றது.
• இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டது. இதில் 2.6 KM பரப்பளவை உடைய கொழும்பு துறைமுக நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பரப்பளவு 612.99 KM ஆக அதிகரித்துள்ளது.
• நடைமுறையிலுள்ள அனைத்து தொழிற்சட்டங்களையும் ஒன்றாக இணைத்து புதிய தொழிற்சட்டமொன்றை ஆக்க அமைச்சரவை அரசாங்கத்திற்கு அனுமதி அளித்தது.
• மண்ணெண்ணையின் விலை 70 ரூபாவாக குறைக்கப்பட்டது.
• வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 29 மில்லியன் ரூபாய்களை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியது.
• இலங்கையின் தபால் கட்டணங்கள் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன.
உலக நிகழ்வுகள்
• ஸ்பெய்னின் பிரதமராக சோஷலிசக் கட்சியின் தலைவர் பெட்ரோ சன்செத் பதவியேற்றார். பதவிப்பிரமாணத்தை மன்னர் பெல்லீப்பெ செய்து வைத்தார்.; ஸ்பெய்னின் பிரதமர் மரியானா ரஜோயிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றதையடுத்து அவர் பதவி விலகினார். இதை அடுத்தே இந்த பதவிப் பிரமாணம் இடம்பெற்றள்ளது.
• சவூதியில் பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு இருந்த தடை நீக்கப்பட்டு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.
• I Phoneஇன் IOS 12 இயங்குதளம் வெளியிடப்பட்டது. இவ்வருட இறுதியில் வாடிக்கையாளர்கள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
• ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு புதிய உறுப்பு நாடுகள் சேர்க்கப்பட்டன. ஜேர்மனி , பெல்ஜியம், தென்னாபிரிக்கா , டொமினிக்கன் குடியரசு, இந்தோனேசியா என்பவையே அவை. இவற்றின் பதவிக்காலம் 2019 ஜனவரியில் ஆரம்பிக்கின்றன. 5 நாடுகளின் பதவிக் காலம் 2018 உடன் முடிவடைவதால் புதிய 5 நாடுகள் சேர்க்கப்படுகின்றன. 2 ஆண்டு காலத்திற்கு இவை உறுப்பினர்களாக தொழிற்படவுள்ளன. சீனா, பிரான்ஸ், ரஸ்யா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நிரந்தர நாடுகள் உட்பட 15 நாடுகளை ஐ.நா பாதுகாப்புச் சபை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
• பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் அண்மைக்கால தாக்குதல் சம்மந்தமாக இஸ்ரேல் மீது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 120 நாடுகளின் ஆதரவுடன் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ் அமைப்பின் மீது குற்றம் சாட்டும் அமெரிக்காவின் தீர்மானமும் நிராகரிக்கப்பட்டது. அரபு, முஸ்லிம் நாடுகள் சார்பில் அல்ஜீரியா மற்றும் துருக்கி என்பன ஐ.நா பொதுச் சபையில் இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்தன.
• கொலம்பிய ஜனாதிபதித் தேர்தலில் பழமைவாதியான இவான் டுகயி வெற்றி பெற்றார்.
• மெசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற மெசிடோனியா மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்தன.
• வடகொரிய தலைவர் கிம் ஜொன் உன் சீனாவுக்கு விஜயம் செய்தார்.
• ஐ.நா மனித உரிமைப் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியது.
• போர்ப்ஸ் சஞ்சிகையின் உலகப் பணக்காரர் பட்டியலில் அமேசன் நிறுவுனர் ஜெப் பெசோஸ் முதலிடத்தைப் பெற்றார். இரண்டாம் இடத்தை பில்கேட்ஸும் மூன்றாம் இடத்தை முதலீட்டாளர் வெர்ரன் பப்பட் என்பவரும் பெற்றுக் கொண்டனர்.
• அமெரிக்காவின் உற்பத்திகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் வரி அறவிட தீர்மானித்தது. இந்தியாவும் அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 % வரி விதிக்க தீர்மானித்தது. அமெரிக்காவின் வரி விதிப்புக் கொள்கைக்கு பதிலடியாக இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
• துருக்கியின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுவமன்றத் தேர்தல் ஆகியன ஒரே நாளில் நடைபெற்றன. தையிப் எர்டோகன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். பாராளுவமன்றத் தேர்தலில் எர்டோகானைத் தலைமையாகக் கொண்ட மக்கள் கூட்டமைப்பு வெற்றி பெற்றது. துருக்கியின் பிரதமர் பதவி ஜனாதிபதிப் பதவியாக மாற்றப்பட்டு எர்டோகான் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு நிகழ்வுகள்
• 21 ஆவது உலக உதைப்பந்தாட்டப் போட்டிகள் ரஷ்யாவில் ஆரம்பித்தன. 22 ஆவது உலக உதைப்பந்தாட்டப் போட்டிகள் 2022 இல் கட்டாரிலும் 23 ஆவது உலக உதைப்பந்தாட்டப் போட்டிகள் 2026இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளிலும் நடக்கவுள்ளன.
• கரீபியன் தீவுகளைத் தாக்கிய இரட்டைப் புயலால் பாதிக்கப்பட்ட 5 மைதானங்களைப் புனரமைக்க நிதி திரட்டும் நோக்கில் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக பதினொருவர் அணிக்கும்( தலைவர் அப்ரிடி) மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குமிடையிலான கிரிக்கட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
Friday, April 26, 2019
Subscribe to:
Post Comments (Atom)
#உலக #அறிவு ஒவ்வொரு துறையிலும் #தந்தை எனப் போற்றப்படுபவர்கள். 1) வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் 2) புவியலின் தந்தை? தாலமி 3) இயற்பியல...
-
*கல்வி தொடர்பான மாநாடுகள்* 1- *"ஜொம்ரியன் மாநாடு* " இதன் நோக்கு "யாவருக்கும் கல்வி " 1990 ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற...
-
For principal service and sleas 1) இல்ங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது? : மத்துகம 2)மத்திய மகாவித்தியால...
-
🕸🕸🕸🕸🕸🕸🕸 *1 PAN* -Permanent Account Number *2. PDF*-Portable Document Format *3. HDFC -*-Housing Development Finance Corporation *...
No comments:
Post a Comment